இந்த தகவலின்படி, திருவொற்றியூர் மண்டலத்தில் 14 ஆயிரத்து 664 நபர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். 250 பேர் அங்கு உயிரிழந்துள்ள சூழலில், 62 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மணலி மண்டலத்தில் 7 ஆயிரத்து 859 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 76 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 41 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதவரம் மண்டலத்தில் 19 ஆயிரத்து 870 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 244 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள சூழலில், 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தண்டையார்பேட்டை மண்டலத்தில் 34 ஆயிரத்து 869 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 540 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 119 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் 37 ஆயிரத்து 285 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 589 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 121 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.




திரு.வி.க. நகர் மண்டலத்தில் 40 ஆயிரத்து 544 பேர் குணம் அடைந்துள்ளனர். 835 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்தில் 42 ஆயிரத்து 112 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 659 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 101 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அண்ணாநகர் மண்டலத்தில் 54 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர். 955 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 148 நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 48 ஆயிரத்து 927 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 950 பேர் அந்த மண்டலத்தில் உயிரிழந்துள்ள நிலையில், 167 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.




கோடம்பாக்கம் மண்டலத்தில் 51 ஆயிரத்து 704 பேர் குணம் அடைந்துள்ளனர். 931 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 141 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் 35 ஆயிரத்து 59 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 452 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 112 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆலந்தூர் மண்டலத்தில் 24 ஆயிரத்து 203 பேர் குணம் அடைந்துள்ளனர். 367 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 69 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


அடையாறு மண்டலத்தில் 44 ஆயிரத்து 53 பேர் குணம் அடைந்துள்ளனர். 663 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 155 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருங்குடி மண்டலத்தில் 25 ஆயிரத்து 11 பேர் குணம்அடைந்துள்ள நிலையில், 100 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 16 ஆயிரத்து 135 நபர்கள் குணம் அடைந்துள்ளனர். 135 பேர் அங்கு உயிரிழந்துள்ள நிலையில், 44 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.