தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் அடையாளமாக பல இடங்கள் திகழ்ந்து வருகிறது. தொழில், கலை, விளையாட்டு என்று பல துறைகளுக்கு தலைநகராக திகழும் சென்னை தொழில்துறையிலும் முதன்மை நகராக திகழ்கிறது. 

சென்ட்ரல் டவர் - Chennai Central Tower

இந்த நிலையில், சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான புதிய வர்த்தக மையத்தை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த புதிய வர்த்தக மையத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாட்டினார். இந்த கட்டிடத்திற்கு சென்டரல் டவர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கட்டிடமானது 27 மாடிகளுடன் நான்கு தரைதளங்களுடன் இந்த கட்டிடம் அமைய உள்ளது. மொத்தம் 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. தலைநகரின் முக்கியமான வர்த்தக கட்டிடமாக இந்த கட்டிடத்தை வடிவமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளனர். 

அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்:

இந்த புதிய வர்த்தக மையமான சென்ட்ரல் டவர் சென்னையின் மிகவும் பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அமைய உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அடிக்கல்லை இன்று நாட்டியுள்ள நிலையில் இதன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவற்றை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் அமைய உள்ள இந்த புதிய சென்ட்ரல் டவரானது சென்னையில் தற்போது பிரபலமாக உள்ள மற்ற வணிக வளாகங்களை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. 

350 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள இந்த வணிக வளாகத்தில் தினசரி கோடிக்கணக்கான மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் வகையில் ஏற்பாடுகளையும் அரசு முன்னெடுத்து வருகிறது. 

ALSO READ | Tambaram New Bus Stand: GST சாலையில் இனி NO டிராபிக்.. தாம்பரத்தில் வருகிறது புதிய பேருந்து நிலையம்!!