Cyclone Mandous: மாண்டஸ் புயல் பாதிப்புகளால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக சென்னையின் பல இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. சேப்பாக்கம் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


விமான சேவை ரத்து:


மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் இன்றும் 19 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மாண்டஸ் புயல்:


தென்மேற்கு வங்கக் கடலில் உருவான  புயல் "Mandous" கடந்த 06 மணி நேரத்தில் 12 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திராவை கடந்தது. 




 





இது மாமல்லபுரம் (மகாபலிபுரம்) க்கு அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி கரையை கடந்தது


பெரிதாக பாதிப்புகள் ஏதும் இல்லை:


மாண்டஸ் புயலில் இருந்து சென்னை முழுமையாக மீண்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து இன்று நேரில் ஆய்வு செய்தார். திருவான்மியூர் பகுதியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து சென்னை காசிமேடு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நிருபர்களைச் சந்தித்தார்.


அப்போது அவர் மாண்டஸ் புயலால் சென்னையில் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும், நிவாரண உதவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அவர் இந்த இக்கட்டான காலத்தில் களத்தில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.


வட தமிழகத்தில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ("மாண்டஸ்" புயலின்) கடந்த 6 மணி நேரத்தில் 9 கிமீ வேகத்தில் மேற்கு-தென்மேற்கு திசையில் கிட்டத்தட்ட மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நேரத்தில் வட தமிழகத்தின் மீது மையம் கொண்டிருந்தது.  


வேலூருக்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 40கிமீ மற்றும் கிருஷ்ணகிரிக்கு கிழக்கு-வடகிழக்கே 140கிமீ தொலைவில் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 




மேலும் வாசிக்க.


TN Rain Alert: 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த மாவட்டங்கள்..? முழு விவரம் உள்ளே..!