ஆலப்பாக்கம் மப்பேடு சாலையில் இந்திய விமான நிலைய சுற்றுச்சுவர் அருகே மறுபடியும் ஒரு முதலை காணப்பட்டது.

Continues below advertisement

சென்னையில் கடந்த வாரம் கனமழையின் காரணமாக வெள்ளத்தில் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வந்தனர். அப்பொழுது பெருங்களத்தூர் பகுதியில் முதலை ஒன்று தென்பட்டது. இரவு நேரத்தில் அந்த முதலை சாலையை ஒய்யாரமாக கடந்து சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் அந்த முதலை சாதுவான முதலை எனவும் மக்களை பார்த்தால் அந்த முதலை பயப்படக்கூடிய வகையை சார்ந்தது எனவும் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Continues below advertisement

அந்த முதலைக்கு என்ன ஆனது என்று குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஆலப்பாக்கம் மப்பேடு சாலையில் இந்திய விமான நிலையம் சுற்றுச்சுவர் அருகே மறுபடியும் ஒரு முதலை காணப்பட்டுள்ளது. தற்பொழுது அந்த சுற்றுச்சூழல் அருகே அந்த முதலை படுத்துக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. பெருங்களத்தூர் பகுதியில் காணப்பட்ட முதலையா இது அல்லது வேறு ஏதாவது பகுதியில் இருந்து, இந்த முதலை வந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதி அருகே இந்த முதலை சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஏற்கனவே பெருங்களத்தூர் பகுதியில் தென்பட்ட முதலை நெடுங்குன்றம் ஏரியில் இருந்து வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது காணப்பட்ட முதலை பிடிபட்டது. கிண்டி பூங்காவிற்கு முதலை கொண்டு செல்ல போவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெருங்களத்தூர் தென்பட்ட அதே முதலையாக இது இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை, ஒப்பீடு செய்து இறுதி முடிவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.