சென்னை அடுத்த மாங்காடு மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். 42 வயதான லட்சுமிபதி வேலைக்காக நடந்து சென்றபோது கால் தவறி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மழைநீர் வடிகால் பணிகள் உரிய பாதுகாப்பின்றி நடந்து வந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.