வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.
சென்னையில் சைதாப்பேட்டை, நந்தனம், ஈக்காட்டுதாங்கல், ஆயிரம் விளக்கு, ஆலந்தூர், கிண்டி, ஏர்போர்ட், பெருங்குடி, மடிப்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்க கடல் ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மற்றும் வட மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிகளோ கொடுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு:
தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 14 மாவட்டங்களில் நாளை( நவ.10) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை கனமழை பெய்யும் இடங்கள்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை,சிவகங்கை, இராமநாதபுரம் விருதுநகர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்...
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் -12 கனமழை பெய்யும் இடங்கள்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடதூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்...
கள்ளக்குறிச்சி, பெரம்பதார், அரியதூர், நாமக்கல், சேலம், கரூர், திருப்பூர், கோயம்புத்தார், நீலகிரி, ஈரோடு, நர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நவம்பர் -13 கனமழை பெய்யும் இடங்கள்:
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.