இலங்கையில் கொழும்பு நகரிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏா்லைன்ஸ் விமானம்  நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது . ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னை வரும் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து வந்த பயணிகளிடம் வழக்கத்தை விட கூடுதல் கவனத்துடன்,  சென்னை விமான நிலைய சுங்க அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, இலங்கையைச் சோந்த பாத்திமா ரபியா (27), பாத்திமா நவியா (24), பாத்திமா ஆப்ரா (32) ஆகிய 3 பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தது தெரியவந்தது.





இந்தப் பெண்கள் தங்களிடம் சுங்கத் தீா்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனா். அப்போது சுங்க அலுவலா்களுக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பெண் சுங்க அலுவலா்கள் அந்த மூன்று பெண்களையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனா். அப்போது, அவா்களது ஆடை மற்றும் தலை முடியில் பொருத்தும் ரப்பா் பேண்ட் ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் 1 கிலோ 275 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினா். இதன் சா்வதேச மதிப்பு 59.26 லட்சம் ரூபாயாக இருக்கும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

 


இதையடுத்து சுங்க அலுவலா்கள் மூன்று பெண்களையும் கைது செய்தனா். இவா்கள் இந்த தங்கத்தை சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தனா் என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மூன்று பெண்கள் இதற்கு முன்பு தங்கம் கடத்தி உள்ளார்களா, என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி ஸ்ரீலங்கா கொழும்பில் இருந்து, கடத்தி வரப்பட்ட 3.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள், கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மதிப்பு சுமார் 1.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்ட கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Crime : நள்ளிரவு பூஜை.. நாகதோஷம்.. பகீர் திட்டம்.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர