செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம் பகுதியில் செங்கல்பட்டு- திருக்கழுகன்றம் பிரதான சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணிக்கு XYLO காரில் 4 பேர் கொண்ட கும்பல் காரில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை கடத்தி வந்து நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பியுள்ளது .தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



 

 இதில் இறந்தவர் சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பதும் இவர் பரங்கிமலை பாமக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என்பதும் பகுதி நேரமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வருவதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று இரவு வழக்கம் போல் சைலோ கார் எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறை சார்பில் காரை கடத்துவதற்காக கொலை நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.



 

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், அடையாளம் தெரியாத ஒரு நபர் கொலை செய்திருப்பது குறித்து தகவல் கிடைத்ததும் விசாரணையில், அவர் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மகன் அர்ஜூன் (30) என்பதும், இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்ததும், சம்பவத்தன்று, மர்ம கும்பல் ஒன்று இவரை சவாரிக்காக அழைத்துச்சென்று, வல்லம் பேருந்து நிலையம் அருகே, கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, காருடன் தப்பிச்சென்றது தெரிய வந்தது. இப்புகாரின்பேரில், தனிப்படை அமைத்து கால் டாக்ஸி டிரைவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றோம் என தெரிவித்தன.



 சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த நபர்கள் பலர் கொலை செய்யப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில்  எரிப்பதும், தடயங்களை மறைப்பது போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது. காவல்துறை ரோந்து பணியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும் இரவு நேரங்களில் செங்கல்பட்டு நகர பகுதிகளில் வரும் கார்களை சோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Crime : நள்ளிரவு பூஜை.. நாகதோஷம்.. பகீர் திட்டம்.. கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் சாமியார் கைது..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர