தன் கண் முன்னே சைக்கிள் திருடுபோனதால், வருத்தத்தில் இருந்த சிறுவனுக்கு மீண்டும் சைக்கிளை கண்டுபிடித்து கொடுத்துள்ளார் காவல் துணை ஆணையர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பெரிய அபார்ட்மெண்டில் வசித்து வருபவர் சிறுவன் க்ரீஷ். 6ஆம் வகுப்பு படிக்கும் இச்சிறுவன் தனது குடியிருப்பு வளாகத்தில் கடந்த வாரம் இரவு விளையாடி வந்துள்ளார். அப்போது, சிறுவனின் கண் முன்னே, திருடன் ஒருவன் சைக்கிளை திருடி சென்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த க்ரீஷ், துரத்திக்கொண்டே சென்றுள்ளார். ஆனால், அவரால் முடியவில்லை. பின்னர், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோருக்கு தெரிவிக்க, அவர்கள் சைக்கிள் திருடுபோனது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.




மேலும் படிக்க: RBI Repo Rate: ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 ஆக இருக்கும்; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ஆளுநர்




 


புகார் கொடுத்த பிறகும், சிறுவன் க்ரீஷ் சைக்கிள் திருடபோன சோகத்தில் உணவு கூட சாப்பிடாமல் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த தகவல் காவல் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு வந்தது. அவர் விசாரணை துரிதப்படுத்துங்கள் தனிப்படை போலீசாருக்கு அறிவுறுத்தினார். அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.


அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மாங்காட்டை சேர்ந்த அஸ்ரர் என்பவரை கைது செய்து, அவரிடம் சைக்கிள் மீட்கப்பட்டது. அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 


மீட்கப்பட்ட சைக்கிளை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன், சிறுவனின் வீட்டுக்கே சென்று கொடுத்தார். தனது கண் முன்முன்னே காணாமல் போன சைக்கிள் கிடைத்ததில் சிறுவன் க்ரீஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். மேலும், இதற்காக உதவி செய்த அனைத்து போலீஸாருக்கு நன்றியும் கூறினார்.


சிறுவன் கண்ணெதிரே திருடன் சைக்கிளை திருடி சென்றதால் மனதளவில் சிறுவனுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற எண்ணத்திலேயே துரிதமாக செயல்பட்டு சைக்கிளை மீட்டதாக தனிப்படை போலீசார் கூறினார்.


துரிதமாக செயல்பட்டு சைக்கிளை மீட்டு சிறுவனிடம் ஒப்படைத்த காவல் துணை ஆணையருக்கும், தனிப்படை போலீசாருக்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அத்துடன், இதேபோல் மற்ற திருட்டு வழக்குகளிலும் வேகமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் படிக்க: Mahaan Movie Twitter Review: மகான் படம் எப்படி இருக்கு.. ட்விட்டர்வாசிகள் சொல்வதென்ன?




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண