காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்  ஒரகடத்திலிருந்து படப்பை நோக்கி கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே சாலையில், படப்பையில் இருந்து ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு வந்திருந்த காரில், ஒருபுறத்தில் அந்த லாரி உரசியதால், அது எதிரே சென்று கொண்டிருந்த வாகனத்தில் மோதியது. 

 



இதன் காரணமாக காரில் சென்று கொண்டிருந்த டிரைவர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  அதேபோல கார் மோதியதில் மற்றொரு வாகனத்தில் சென்று கொண்டிருந்த குழந்தை  உயிரிழந்தது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






ஐந்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ஓட்டுநர் கமல், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வயது 40. அதேபோல உயிரிழந்த மற்றொருவர் டெல்லியை சேர்ந்த சர்மா, வயது 46 என தெரியவந்துள்ளது.



 

மேலும் இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பை நோக்கி செல்லும் இரண்டு கார்களை, எதிர் திசையில் இருந்து வரும் கனராக வாகனம் ஆனது கண்ணிமைக்கும் நேரத்தில், தவறான சாலையில் வாகனத்தை செலுத்தி இரண்டு கார்களை அடித்து நொறுக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு உடனடியாக லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 



இதுகுறித்து காவல்துறையினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விசாரணையில் ஒருவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதும், தாம்பரத்தை சேர்ந்த டிரைவர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுபோக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒருவரும் பலியாகியுள்ளார். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகிறோம் என தெரிவித்தனர்