செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணிநேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர். 



வண்டலூர் பூங்கா நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விலங்குகளுக்கும் தனித்தனி பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. விலங்குகள் நடமாட்டத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும், உடனடியாக மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டு பராமரிப்பாளர்கள் உதவியுடன் விலங்குகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 18 வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த 1½ மாதமாக உடல் நிலை சரி இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து பூங்கா மருத்துவர்கள் தொடர்ந்து வரிக்குதிரை டீனாவிற்கு பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று மாலை 4 மணி அளவில் வரிக்குதிரை டீனா பரிதாபமாக உயிரிழந்தது. வரிக்குதிரை இறந்ததைத் தொடர்ந்து பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு பூங்கா நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




சமீபகாலமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி உள்ளிட்ட முக்கிய விலங்குகள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை உயிரிழந்ததை தொடர்ந்து மற்ற விலங்குகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்த பதினெட்டு வயதான டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த ஒன்றரை மாத காலமாக பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக சிகிச்சை பெற்று வந்தது. பூங்கா கால்நடை மருத்துவர்களால் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் குதிரையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் சிகிச்சை பலனின்றி டீனா உயிரிழந்து விட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


 


”டான்ஸ் தப்பா ஆடுனா மாஸ்டர் திட்டுவாரோனு பயப்படுவாரு“ - ரஜினி குறித்து ஜான் பாபு மாஸ்டர்