ஓசி டிக்கெட் தானே எழுந்திரிங்க என பேருந்தில் பயணம் செய்த பெண்களை எழுப்பி விட்டுவிட்டு பேருந்து சீட்டில் அமர்ந்த கல்லூரி இளைஞர்கள், பெண் பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்படும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது..

Continues below advertisement

சென்னை அய்யப்பன்தாங்கலில் இருந்து பிராட்வே நோக்கி செல்லும் தடம் எண் 26 பேருந்தில் வடபழனி அவிச்சி பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே வந்தது. அப்போது இளைஞர்கள் சிலர் பேருந்தில் ஏறியுள்ளனர். பேருந்தில் ஏறிய அவர்கள், மாநகர பேருந்தில் அமைந்துள்ள மகளிர் இருக்கைகளில் அமர்திருந்த பெண்கள், மற்றும் வயதானவர்களை  எழுப்பி விட்டுவிட்டு அராஜகமாக அமர்ந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ‘துள்ளிக்குதிக்கும் தூத்துக்குடி மக்கள்’ 17 ஆண்டுகளுக்கு பிறகு தென்தமிழக மக்களின் திட்டம் நிறைவேற்றம்..!

Continues below advertisement

ஒரே இருக்கையில் மூன்றுக்கும் அதிகமான நபர்கள் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுப்பட்டதோடு, பெண்கள் மற்றும் வயதானவர்களை எழுந்து போக கூறியுள்ளனர்.  ஓசி டிக்கெட்டில் தானே நீங்களாம் பயணம் செய்ரீங்க.. நாங்க காசு கொடுத்து தான் வரோம் எனக்கூறியதாக சொல்லபடுகிறது. இளைஞர்களின் இந்த செயலால் ஆத்திரமடைந்த பெண்மனி ஒருவர் அவர்களை தட்டி கேட்டபோது, ஆவேசமாக மிரட்டும் தொணியில் அந்த இளைஞர்கள் பதில் பேசியுள்ளனர்.

இந்நிலையில் இதை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண்மனி ”ஏந்திருச்சுறு.. ஏந்திருச்சுறு.. லேடீஸ் நின்னுட்டு வராங்க.. வயசானவங்க நிக்குறாங்க.. வயசு பசங்க உங்களுக்கு என்ன என்று சென்னை மாநகர் பேருந்தில் மகளிர் இருக்கைகளை ஆக்கிரமித்து அமர்திருந்த இளைஞர்களை, தட்டி கேட்ட பெண்மணியை ஓசி டிக்கெட் என்று குறிப்பிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காட்சி சமூகவளைத்தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.. இந்நிலையில் அடாவடி செய்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது..

இதையும் படிங்க: Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...