விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேர் உயிரிழந்தனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் விற்கப்பட்ட விஷ சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். முதல்கட்டமாக, விஷச்சாராயம் அருந்தியதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வரும்  பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த அஞ்சலை என்பவரிடம் செங்கல்பட்டு மாவட்ட விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரணை நடத்தினார். இதனையடுத்து, மதுராந்தகம் அருகே கரிக்கந்தாங்கள் கிராமத்தில் விஷச்சாராயம் விற்ற அமாவாசைக்கு சொந்தமான பண்ணைக்கு  சென்று  சிபிசிஐடி விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி மகேஸ்வரி தலைமையில், அந்தப் பண்னையில் காவல் பணியில் ஈடுபட்ட இருந்த பணியாளரிடம் தொடர்ந்து , அரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

 

அடுத்தடுத்து கைது 

 

இதில் டிஎஸ்பி வேல்முருகன் செல்வகுமார் ஆய்வாளர் அருள் பிரசாத் ஆகியோர் விசாரணை போது உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, பெருக்கரணையில் சின்னத்தம்பி வசந்தா வீடுகளில் சென்று அவர்கள் இறந்த இடங்கள் மற்றும் அவர்களின் வீடுகளை ஆய்வு நடத்தினர். அங்குள்ள விஷச்சாராயம் எடுத்து வந்து அருந்திய பாட்டில்களையும் இறந்து கிடந்த இடங்களையும், மேலும் அவர்களின் உறவினர்களிடமும் தொடர்ந்து,  1 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் பேரம்பாக்கத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த  வெண்ணியப்பன்  அவரது மனைவி சந்திரா மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் கள்ளச்சாராயம் அருந்திய பாட்டில்களையும் பறிமுதல் செய்து   முதற்கட்ட விசாரணை செய்தனர். இன்னும் பலரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் ஆதாரங்களை திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

செங்கல்பட்டு மாவட்ட காவல் உட்கோட்ட பகுதியில் மொத்தம் 50 மதுபான பார்கள் உள்ளது. இந்த அனைத்து பார்களையும் மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவுறுத்தலின் படி, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய் பிரணீத் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான பார்களை மூட காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக மேல்மருவத்தூர் மற்றும் சட்ராஸ் ஆகிய இரண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இரண்டு மதுபான பார்களுக்கு காவல் துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள 48 பார்கள் மூடபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.