செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ( chengalpattu juvenile home )

 

செங்கல்பட்டு சிறுவர் சீர் நோக்கு இல்லத்தில், கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு தாம்பரத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், பாதுகாப்புக்கு இருந்த காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்திலிருந்து இருவர் தப்பித்து சென்றனர்.



 

திடீர் போராட்டம் 

 

அதே போன்று மற்றொரு சம்பவமாக நேற்று முன் தினம் மூன்று பேர் தப்பித்து சென்றதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செங்கல்பட்டு சிறார் சீர்நோக்கு இல்லத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறார் சீர்நோக்கு இல்லத்தில், உள்ள சிறுவர்கள் தங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை அரசு தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.




சிறுநீரை பிடித்து முகத்தில் வீசுகிறார்கள்

 

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஊழியர் ஒருவர் நம்மிடம் கூறுகையில், ”செங்கல்பட்டு அரசு  சீர் நோக்கு இல்லத்தில், ஊழியர்கள் தங்கள் உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல், நாள்தோறும் மன உளச்சலோடு வேலை பார்த்து வருகிறோம். சீர்திருத்த பள்ளி மாணவர்களை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என ஊழியர்கள் குற்றச்சாட்டு. தினமும் அடித்தட்டு ஊழியர் முதல் பள்ளி காவல்வரை அனைவரையும் ஒருமையில், அசிங்கமாக திட்டுவது சிறுநீரை பிடித்து முகத்தில் வீசுவது. சாபிடுவதற்கு வெளியில் வந்தால் திரும்ப உள்ளே போகாமல், எங்களை திட்டுவது மட்டுமல்லாமல் விரைவில் உங்கள் எல்லோரையும் முடித்துவிட்டு நாங்கள்  அத்துனை பேரும் இங்கிருந்து தப்பிவிடுவோம் உங்களால் எதுவும் செய்யமுடியாது. என நாளுக்கு நாள் இந்த மாணவர்கள் படாத பாடு படுத்துகிறார்கள்.



 

எங்களால் நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை , அவர்களை கண்டித்தால் அரசு எங்கள்மீது நடவடிக்கை எடுக்கிறது. அதனால் எங்களின் பாதுகாப்பு கருதி உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் எங்களுக்கு ஒரு ஷிப்டுக்கு  கூடுதலாக ஐந்து பேர் பணியாற்ற வேண்டும். தினமும் இரண்டு  ஏஆர் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி ஊழியர்கள் தமிழக அரசுக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் கோரிக்கை முன் வைக்கிறோம்” என தெரிவித்தார்.