செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடையே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 பாலாறு பாலங்கள் உள்ளது. இந்த இரு பாலத்தின் தூண்களுக்கு இடையே உள்ள பாலத்தின் இணைப்பு ரப்பர் மற்றும் இரும்பு சட்டம் பழுதானதால், கடந்த சில மாதங்களாகவே இந்த பாலத்தின் மேல் பகுதியில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் வரும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, வேறு கிராமங்கள் வழியாக சுற்றி சென்றன. பாலத்தின் மீது போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு சில விபத்துகளும் ஏற்பட்டிருந்தது. இந்தப் பாலத்தை சுமார் 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் தொடங்கினர்.
அதன்படி முதல் கட்டமாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய பாலாற்று பாலத்தை கடந்த மாதம் முழுவதுமாக மூடப்பட்டு சீரமைக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சீரமைக்கும் பணியானது முழுமையாக சீரமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்திற்காக பாலத்தை திறந்து விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மற்றொரு பாலத்தை, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முழுமையாக மூடப்பட்டு சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது . இதனை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
பின்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் 18 ஆம் தேதி பாலம் முழுமையாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் எனவும் கிராமப்புறங்களில் உள்ள பாலங்கள் அனைத்தையும் உயர்மட்ட அளவில் மாற்றப்படும் எனவும் கூறினார். தமிழகம் முழுவதும் தற்போது இருக்கும் தரை பாலங்களை தரம் உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விரைவாக மோசமான நிலையில் இருக்கும் தரைப்பாலம் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதேபோல் மழை காலங்களில் ஏற்பட்ட சாலைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது எனவும், இந்தப் பாலம் சீரமைக்கும் பணிகளை உத்தரவு கடந்த வருடமே கிடைத்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் தள்ளி சென்று உள்ளதாக தெரிவித்தார். இந்தப் பாலத்தை சீரமைக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும் நிலை இருந்த நிலையில், மைக்ரோ யூரின் எனக் கூறப்படும் தொழில்நுட்ப உதவியுடன் ஒரு மாத காலத்திலேயே பாலத்தின் வேலை நிறைவடைய உள்ளதாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Rahul Gandhi on Petrol Diesel Price Hike : லிட்டருக்கு ரூ.12 வரை உயரும் பெட்ரோல், டீசல் விலை?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்