செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பனங்காட்டு சேரி பகுதியில், தாய் மற்றும் தந்தையை ஏமாற்றி மகளே சொத்துக்களை அபகரித்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாற்றுத்திறனாளி மகளுடன் கணவனை இழந்த மூதாட்டி செய்வதறியாமல், பரிதவித்து வருகிறார். மகள் மற்றும் மருமகன் சேர்ந்து கொண்டு வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி  அளித்த புகாரில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பனங்காட்டுசேரி கிராமத்தில் வசித்து வருகிறேன், எனது கணவர் படவட்டான் பெயரில் பனங்காட்டுசேரியில், 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சத்தியா, சரசு, லட்சுமி ஆகிய மூன்று மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாற்றுத்திறனாளியான கன்னியம்மாள் என்ற மகளுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. அதனால் கன்னியம்மாள் என் பொறுப்பில் உள்ளார். எனது கணவர் படவேட்டான் பெயரில் இருந்த நிலங்களை எனக்கும் எனது மூன்று மகள்களுக்கும் தெரியாமல், மூன்றாவது மகள் லட்சுமி தனது பெயரிலும், தனது கணவர் மணிமாறன் என்பவர் பெயரிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிமை மாற்றம் செய்து விட்டதாக, இதனால் என் கணவர் படவேட்டான் , தன் செட்டில்மெண்ட் கொடுத்தது போன்று போலியாக எழுதப்பட்டுள்ளது .

 

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட பொழுது, கடந்த 6 மாதத்திற்கு முன்பு உங்களது கணவர் பெயரில் உள்ள இடத்தை உங்கள் 3வது மகள் அவரது கணவன் மணிமாறன் பெயரில் எழுதி பட்டா மாற்றி விட்டதாகும் கிராமத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட தனது கணவர் மோசடி செய்த நிலத்தை அபகரித்ததாகும் தினம் தினம் கண்ணீர் மல்க இருந்தார். இதுகுறித்து மணிமாறனிடம், கேட்ட பொழுது, சொத்து எனது பெயருக்கும் எனது மனைவி பெயருக்கு மாற்றிவிட்டது. நிலத்தையும் வீட்டையும் காலி செய்து கொடுங்கள் என கூறியுள்ளார். இதனால் என் கணவருக்கு மன உளைச்சலில் நெஞ்சுவலி ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கடந்த 9ம் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தனது மாற்றுத்திறனாளி மகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனது காலத்திற்கு பிறகு மேற்படி சொத்தை சரிசமமாக 4 மகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதே எனது ஆசை, ஆனால் இவ்வாறு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக தெரிவிக்கிறார். உடனடியாக இதற்கு மாவட்ட ஆட்சியார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.