செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் லெனின்,  நரேஷ் பாபு, மேத்யூ ஆகிய மூன்று பேரும் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அடிதடி கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது மேலும் பல்வேறு காவல் நிலையத்தில் குற்றப்பத்திரிக்கையும் இவர்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் லெனின் என்ற ரவுடி அதே பகுதியைச் சேர்ந்த  மேத்யூவின் நண்பரான சூர்யாவை படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் தனது நண்பரை கொலை செய்த நபர்களை கொலை செய்ய வேண்டும் என மேத்யூ, லெனின் மற்றும் அவரது சித்தப்பா மகன் நரேஷ் பாபு ஆகிய இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

 

இந்நிலையில், நரேஷ் பாபுவின் திருமணம் கடந்த சில நாட்களுக்கு   மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. முன்னதாக, நரேஷ் பாபுவை திருமண மண்டபத்திற்குள் புகுந்து வெட்டி கொலை செய்வேன் என மேத்யூ கடந்த 3 மாதத்துக்கு முன்பு சபதம் போட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மண்டபத்தை சுற்றி குவிக்கப்பட்டு, மேத்யூ வருகிறானா என தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

 

அப்போது, திருமண மண்டபத்திற்குள் சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், லெனின், நரேஷ்பாபு, மேத்யூ ஆகிய மூவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கதாகும்.ரவுடியின் திருமணத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது மட்டும் இல்லாமல், கொலை செய்ய திட்டமிட்டு இருந்தால் மற்றொரு ரவுடியை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.