செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர்  கஜேந்திரன், கலா இவர்களது மகன் ராஜ் . இவர் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை புரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்துள்ள பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் கடந்த திங்கட்கிழமை திருப்போரூரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

 

இதையடுத்து கடந்த 9-ஆம் தேதி மணமகன் ராஜ்  நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழைக் கொடுத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நிலைதடுமாறிய சாலைத் தடுப்பில் மோதிய ராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் , பின்னர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.



 

இந்நிலையில் நேற்றிரவு ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். இதனை அடுத்து இவரின் உடல்கள் ஐந்து பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த திருப்போரூர் போலீசார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு ராஜின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். காலை திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் மரணம் அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Neet Suicide : பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.. நீட் தேர்வில் தோல்வி.. திருவள்ளூர் மாணவி தற்கொலை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர