செங்கல்பட்டு மாவட்டம் அருகே வேப்பஞ்சேரி பாலாற்றில் கடந்த 12 தேதி  பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து கூவத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கூவத்தூர் போலீஸார், பாலாற்றில் மிதந்த பெண் சடலத்தை கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத நிலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 


காவல்துறையினர் நடத்திய விசாரணையில்..

 

மேலும் இதுகுறித்து ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில்,  கண்டுபிடிக்கப்பட்ட பெண் கல்பாக்கம் அருகே நத்தமேடு கிராமத்தை சேர்ந்த சாந்தி ( 50) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் நிகழ்ந்த அன்று, திருக்கழுக்குன்றம் அருகே வல்லிபுரம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வில், கலந்துகொள்ள அவர் சென்றது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன்பின், தனது மகள் உயிரிழந்து விட்ட நிலையில், மருமகனுடன் உள்ள தனது பேரப்பிள்ளைகளை பார்க்க சாந்தி மரக்காணம் சென்றுள்ளார் என்பதை காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். 





போலீசாரிடம் வாக்குமூலம்

 

இதனையடுத்து, மருமகனை விசாரணை செய்ததில் மாமியாரின் பேரில் உள்ள சொத்துக்களை பேரப்பிள்ளைகளின் பெயரில் எழுதி வைக்க வலியுறுத்தியதாகவும் , அதைக் கேட்காத மாமியாரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் 17 வயது நிரம்பிய உறவினர் பையனுடன் இணைந்து டாட்டா சுமோ காரில் கொண்டு வந்து பாலாற்றில் வீசியதாகவும் அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மருமகன் ஆனந்தன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கூவத்தூர் போலீசார் ஆனந்தன் மற்றும் அவரது உறவினரான 17வயது சிறுவனை கைது செய்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை சிறார் சிறையிலும் ஆனந்தனை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக மாமியாரை கொன்று வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண