செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், சுகாதார சீர்கேடு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சுகாதார சீர்கேடு சம்பவத்தால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மட்டும், இல்லாமல் செங்கல்பட்டு நகரமே அவதிப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும், சுமார் 3 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 2 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். அனைத்து நோய்களுக்கும், இங்கு சிகிச்சை அளிப்பதால், மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம், மதுராந்தகம், வந்தவாசி, சேத்பட், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் தினமும் வந்து செல்கின்றனர்.




இதனால், இந்த மருத்துவமனை எப்போதும் பரபரப்புடன் காணப்படும். இந்த மருத்துவமனை வளாகத்தில், அதிகளவு மருத்துவக் கழிவுகள் நாள்தோறும் சேர்ந்து வருகின்றன. இவற்றை முறையாக மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் என தரம் பிரித்து அவற்றை நகராட்சியிடம் கொடுப்பது வழக்கம். அதே போன்று மருத்துவக் கழிவுகள் முறையாக, சிங்கப்பெருமாள் கோவிலில் செயல்பட்டு வரும், அதிநவீன மருத்துவக் கழிவுகள் எரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்வார்கள். 




மருத்துவக் கழிவுகள்


ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முறையாக குப்பைகளை ஊழியர்கள் தரம் பிரிக்காததாலும், நகராட்சி சார்பில் குப்பைகளை கொண்டு செல்லாத காரணத்தினாலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு பார்ப்பதற்கே மயான போல் காட்சியளிக்கிறது. இந்த குப்பைகளில் அதிக அளவு மருத்துவக் கழிவுகள் இருப்பதாலும், நோய் தொற்றுப் பருவம் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 மருத்துவமனை நிர்வாக குறைபாடு ?


குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு இருப்பதால், மாடுகள், நாய்கள் மற்றும் சில சமயங்களில் பன்றிகள் ஆகியவை அந்த இடத்தில் உலா வருவதால் பாதிப்பு இன்னும் அதிகரித்து வண்ணம் உள்ளன. மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதியதாக டீன் நியமிக்கப்படாததால், நிர்வாக குறைபாடுடன் காணப்படுகிறது.




அதேபோல், நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் உறவினர்களுக்கும், அவர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும், அபாயமும் உள்ளது. இந்த மருத்துவ கழிவுகளை, நகராட்சி தூய்மை ஊழியர்கள் அகற்ற வேண்டும். ஆனால், அவர்களும் அதை கண்டும் கொள்ளாமல் உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


 


Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?


கவலையே வேண்டாம். 


சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.