செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் மின்விபத்து ஏற்பட்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவர் பசுமாடு மின்சாரம் பாய்ந்து உயிர் இருந்ததாக விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் புகார் அளித்திருந்தார், ஆகிய இருவருக்கும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் இழப்பீடு தொகையை வழங்கினார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது...
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருக்கழுக்குன்றம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் மின் விபத்து ஏற்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பாக இழப்பீட்டுத் தொகையாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், வழங்கினார். உடன் திருக்கழுக்குன்றம் மின் உபகோட்ட மேற்பார்வை பொறியாளர் திரு.பொன் அருணாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அதேபோன்று , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 22.06.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தனசேகர் என்பவரது பசுமாடு மின்சாரம் பாய்ந்து இறந்தது தொடர்பாக அளித்த மனுவின் பேரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம் சார்பாக இழப்பீட்டுத் தொகையாக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையினை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத்,வழங்கினார். உடன் திருக்கழுக்குன்றம் மின் உபகோட்ட மேற்பார்வை பொறியாளர் திரு.பொன் அருணாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்
புகழ்பெற்ற நடவாவி கிணறு..! பசுமையா மாறப்போகுது..! காஞ்சிபுரம் மக்களுக்கு ஜாலிதான்..!
ஆந்திராவிலிருந்து இப்படியும் தமிழகம் வரும் கஞ்சா...! தலைசுற்ற வைக்கும் கஞ்சா பிரச்சனை..!