செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த தையூர் காட்டுப்பகுதியில் , அப்துல் மஜீதை என்பவரை சகா நண்பர்கள் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கான காரணம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் இரண்டு தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் , சகாயராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் அப்துல் மஜித்தின் நண்பர்கள்  என்பதும் கஞ்சா விற்பனை செய்ய அப்துல் மஜீத்திடம் கஞ்சா மொத்தமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. 


 


கூட்டாக மது அருந்திய நண்பர்கள்


இதில் அப்துல் மஜித் வாங்கிக் கொண்டு விற்பனை செய்துவிட்டு அதற்கான பணத்தை திருப்பிக் கொடுக்காததால் சகாயராஜ், ஸ்ரீகாந்த், விமல் ராஜ், புல்கா மோகன் உள்ளிட்ட சக கூட்டாளிகள் 8 பேர் சேர்ந்து அப்துல் மஜீத்தை மது அருந்த வர வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் தையூர் கோமநகர் பகுதியில் மது மற்றும் கஞ்சா அடித்தவாரு கூட்டாக இருந்துள்ளனர். மது மற்றும் கஞ்சா போதை தலைக்கேறியதும் ஸ்ரீகாந்த் மற்றும் சகாயராஜ், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து விட்டாயா அதுக்கான பணம் 10,000 கொடுக்கும்படி கறாராக கேட்டுள்ளார் இதனால் அவ்விடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.


 


போதையில் வாக்குவாதம்


வாக்குவாதத்தில் அப்துல் மஜீத் ஸ்ரீகாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது உடன் இருந்த சக  நண்பர்கள் எங்களையே அடிக்க துணிந்து விட்டியா உனக்கு அவ்வளவு தைரியமா? என்று ஒன்றுகூடி கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். நிலை குலைந்து கீழ விழுந்த அப்துல் மஜீத் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் வைத்து அடித்து கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் கோமா நகர் பகுதி சேர்ந்தவர்கள் சகாயராஜ், விமல் ராஜ், சேட்டு, ரூபன், பாலமா நகரை சேர்ந்தவர்கள் மோகன் (எ) புல்கா மோகன், மற்றும்  ஸ்ரீகாந்த், அபினேஷ், கண்ணகப்பட்டு மடம்தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகுல் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து கொலை குற்றவாளிகள் என வழக்கு பதிவு செய்தனர். 


 


காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட உடல்


நேற்று குற்றவாளிகளான மோகன் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரையும் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுக்க அடையாளம் காட்டுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது அடையாளம் காட்டப்பட்டு திரும்பும் பொழுது காவல்துறை வலையில், இருந்து இருவரும் தப்பிக்க முயற்சித்துள்ளனர்.  அப்பொழுது சாலையில் தடுக்கி விழுந்து இருவருக்கும் இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது.  


அதேபோல் அபினேஷ் என்பவனும் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் ஸ்ரீகாந்த் மற்றும் புல்கா மோகன் ஆகிய இருவரையும் விரட்டிப் பிடித்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபினேஷ், புல்கா மோகன், ஸ்ரீகாந்த் மற்றும்  சகாயராஜ், விமல் ராஜ், சேட்டு, ரூபன், அபினேஷ், ராகுல், உள்ளிட்ட  எட்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 


 


தொடர் குற்றங்கள் 


கடந்த 2020 ஆம் ஆண்டு தையூர் பகுதியில் அப்துல் மஜீத் கொலை வழக்கில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு என்று கூறப்பட்டாலும், இதில் முக்கிய மூலதமாக செயல்பட்ட சகாயராஜ் மற்றும் விமல்ராஜ் ஆகிய இருவரும் போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கடந்த 2020- ஆம் ஆண்டு தையூர் பகுதியில், சொந்த மாமன் சாமுவேல் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். 


இந்த கொலை வழக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளிவந்த இருவரும் , செங்கல்பட்டு மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனால் தையூர் பகுதியில் இவர்கள் தாதாவாக சுற்றி திரிந்து வந்ததும் இதன் மூலம் தையூர், கோமா நகர், பலமா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சேர்ந்த இளைஞர்களையும் கஞ்சா போதைக்கு அடிமை ஆக்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.