மதுராந்தகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்து மீது மாணவர்கள் கல் வீசி கண்ணாடி உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கூட்ரோடு அருகே உள்ள இந்திராபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற 17 என்ற எண் கொண்ட அரசு பேருந்து  நிறுத்தத்தில், நிற்காததால் மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்ததாக கூறப்படுகிறது . அடிக்கடி இப்பகுதியில் பேருந்துகள் நின்று செல்லவில்லை என அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

 



 

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்ததாக படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பவம் அறிந்து காவல் நிலையத்திற்கு  வந்த பெற்றோர்கள் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும், எடுக்க வேண்டாம் எனவும் உரிய இழப்பீடு வழங்குகிறோம் என நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இடத்தில் சமாதானம் பேசிய காரணமாக  புகார் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து படாளம் காவல் நிலையத்திலிருந்து பேருந்து எடுத்து சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் நின்று ஏற்றி செல்ல வேண்டும்  பெற்றோர்கள் கோரிக்கையாக உள்ளது.

 



 

குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்று அரசு பேருந்துகள் முறையான பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே பேருந்து முழுமையாக நிரம்பி வருவதால்,  பேருந்து நிறுத்தத்தில் நின்றால் பலரை ஏற்றி செல்ல வேண்டும். குறிப்பிடப்பட்ட பேருந்து நிலையத்தில் யாராவது இறங்க வேண்டும் என பேருந்தில் பயணிப்பவர்கள் தெரிவித்தால்,  பேருந்து நிறுத்தத்திற்கு சில மீட்டர்கள் தள்ளியே பேருந்து நிறுத்தப்படுகிறது. சில சமயங்களில் பல இடங்களில் பேருந்துகள் நின்று செல்வதில்லை என குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் இருப்பதால் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர