செங்கல்பட்டு மாவட்டம்  பார்வை



சிற்பக்கலையின் மாமன்னன் மாமல்லனின் மாமல்லபுரம் சிற்பங்களும், கடல்போன்று பரந்து விரிந்த மதுராந்தகம் ஏரியும், வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களும், 'சங்குத்தீர்த்தம்' 'பட்சித்தீர்த்தம்' எனப் புகழப்படுகின்ற, வேதகிரீஸ்வரர் ஆலயமும், செங்கல்பட்டு நகரை ஒட்டிய கொளவாய் ஏரியும், சுழித்துக்கொண்டு பாய்கின்ற பாலாறும், மலைகளும் அமைந்திருக்கின்ற செங்கல்பட்டு மாவட்டம் மிக முக்கிய நகரமாக இருந்து வருகிறது.




 


'செங்கல்பட்டு புத்தகத் திருவிழா -2022 '


செங்கல்பட்டு புத்தகத் திருவிழா, குறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மேலும் ஒரு சிறப்பாக அமையவிருக்கிறது 'செங்கல்பட்டு புத்தகத் திருவிழா -2022 ' தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியோடு மாவட்டந்தோறும் நடைபெற்று வருகின்ற புத்தகத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடைபெற இருக்கின்ற 'செங்கல்பட்டு புத்தகத் திருவிழா 2022' செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தவிருக்கிறது.


இத்திருவிழா 28.12.2022 முதல் 04.01.2023 வரை காலை 10.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி சாலை, அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக அரங்குகள், கலை அரங்கம், உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்துகொண்டு சிறப்பாக்க இருக்கின்ற சிந்தனை அரங்கம் ஆகியவற்றுடன் நடைபெற உள்ளது. செங்கை புத்தகத்திருவிழாவில் கோளரங்கம், புத்தக வெளியீடுகள், மாணவ மாணவியருக்கான போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், ஆகியவை
ஆகியவை நடைபெற உள்ளது.


சிந்தனை தூண்டும் சிறப்பு பேச்சாளர்கள்


இந்நிகழ்வில் சிந்தனையைத் தூண்டும் சிறப்புப் பேச்சாளர்களாக காளீஸ்வரன், ஞானசம்தபந்தம், பர்வீன்சுல்தானா, நெல்லை ஜெயந்தா, இமயம், சண்முக வடிவேல், பாரதிகிருஷ்ணகுமார்,பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுள்ளனர்.




"மீண்டு வந்த தம்பி"


இன்றைய நிகழ்வில் செங்கை புத்தகத் திருவிழாவில் "செஸ் புகழ் தம்பியின் சின்னம் வெளியிடப்படுகிறது "வாசிப்பை நேசிப்போம்" என்ற முனைப்பில் இளைய சமுதாயத்தினரிடையே கையெழுத்து இயக்கமும் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் துவங்கி வைத்தார்.


துவக்க விழா


28.12.2022 அன்று காலை 9.30 மணிக்கு  அமைச்சர், நாடாளுமன்ற  தா. மோ அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிகழ்வைத் துவக்கிவைக்க உள்ளார்கள். 'செங்கல்பட்டு புத்தகத் திருவிழா வாசிப்பை சுவாசிப்பாய் மாற்ற வேண்டி பள்ளிகள் கல்லூரிகள், வாசகர், புத்தக ஆர்வலர், பொதுநோக்கர் மற்றும பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என   மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண