செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகத்சிங் நகரை சேர்ந்தவர் பிரதாப் என்கிற குள்ளன் (33). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தை இல்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவரது மனைவி ப்ரியா (27) என்பவரரோடு பழக்கம் ஏற்ப்பட்டது. அதுவே கள்ளக்காதலாக மாறி ப்ரியாவும் பிரதாப்பும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

Continues below advertisement

இந்த கள்ளக்காதல் விவகாரம் பிரதாப்பின் மனைவிக்கு தெரிந்ததும் பிரதாப்பை கண்டித்துள்ளனர். அதை கண்டுகொள்ளாமல் ப்ரியாவுடனான கள்ளக்காதலை விடவில்லை. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரதாப்பின் மைத்துனர்கள் பிரதாப்பை அடித்து உதைத்து அறிவுரை கூறியுள்ளனர். ஒருவழியாக ப்ரியாவை சந்திப்பதையும் பேசுவதையும் பிரதாப் தவிர்த்து வந்துள்ளார்.

ஆனால் ப்ரியா பிரதாப்பை விடுவதாக இல்லை. தொடர்ந்து பிரதாப்பிடம் தொலைபேசி மூலம் பேச முயற்ச்சிப்பதும் பிரதாப் பேசுவதை தவிர்ப்பதுமாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் நேற்று பாலூர் சாலையில் பிரதாப் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ப்ரியா பிரதாப்பை பார்த்து ”உனக்கு குழந்தை இல்லையென்றும் ஜாலியாக இருக்கவேண்டும் என்றுதானே நாக்கை தொங்க போட்டுக்கொண்டு என்னைத்தேடி வந்தாய்.

Continues below advertisement

இப்ப உனக்கு அளுத்துப்போச்சா..வேற எவளயாவது தேடி போய்ட்டீயா..” என ஒருமையில் மிக கேவலமாக அப்போது அங்கு நின்றிருந்த அப்பகுதியை செர்ந்த பெண்கள் மத்தியில் பேசியுள்ளார்.

ஆத்திரமடைந்த  இன்று விடியற்காலை நேரடியாக பிரியா வீட்டுக்கு சென்ற பிரதாப் மண்ணென்ணை மற்றும் பெயின்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னர் இரண்டையும் கலந்து ப்ரியாவின் முகத்தில் ஊற்றி கொளுத்திவிட்டடு தப்பியோடி விட்டார். தகவலறிந்து வந்த பாலூர் உதவி காவல் ஆய்வாளர் கோதண்டம் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ப்ரியாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய பிரதாப்பை பிடித்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ப்ரியா தற்போது மருத்துவமனையில் 80சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ப்ரியாவை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

 



 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண