சென்னையில் ரசாயன கழிவு : மூச்சுத் திணறல் மற்றும் பல பக்க விளைவுகளால் அவதிப்படும் திருவொற்றியூர் மக்கள்….!




 கடந்த ஒரு மாத காலமாக சென்னை திருவொற்றியூர் பகுதிவாசிகள் தினம் தினம் நடு இரவில், மூச்சுத்திணறல் மற்றும் தலைவலி ஏற்படும் அளவுக்கு ரசாயன வாயு கசிவால் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.


ரசாயன கழிவால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:


குழந்தைகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்டவர்கள் கண்எரிச்சல், தலைவலி போன்றவற்றை அனுபவிப்பதாக கலங்குகிறார்கள். கடந்த ஒரு மாத காலமாக ரசாயன வாயு பரவுவதால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


 தமிழ்நாடு மாசுக்காட்டுப்பட்டு வாரிய அதிகாரிகள் சோதனை செய்ததில், சல்பர் டை ஆக்சைட் வாயு பரவிவருவதாக தெரிவித்தனர்.


திருவொற்றியூறில் ஜோதி நகர், டிகேஎஸ் நகர், சத்தியமூர்த்தி நகர் மற்றும் மணலி ஆகிய பகுதிகளில் ரசாயன வாயு பரவல் அதிகரித்துள்ளதால், காற்றில் பரவி வரும் நச்சு வாயுவை தடுக்க பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து மக்கள் பலர் இதை தாங்க முடியமால் வாழ்விடத்தை விட்டு விட்டு பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள் என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.




 


 


திருவொற்றியூர் எம்.எல்.ஏ கூறியது :


திருவொற்றியூர், மணலி, எண்ணூர் பகுதியில் பல தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் ரசாயன வாயு பரவுவதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். சோதனையில், சிபிசிஎல் ஆலையிலிருந்துதான் இந்த சல்பர் ரசாயன வாயு வெளியேறி இருப்பதை கண்டறிந்தோம். சிபிசிஎல் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். சிபிசிஎல் ஆலை, சமீபத்தில், ரஷ்யாவிலிருந்து பெற்ற கச்சா எண்ணெய்யில் அதிக சல்ஃபர் இருந்ததுதான் காரணம் என தெரியவந்தது. அடுத்தமுறை இதுபோன்ற, அதிக சல்ஃபர் உள்ள கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளோம் என்றார்.


மேலும், தொடர்ந்து ரசாயன வாயு பரவினால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரசாயன வாயு பரவுவது பற்றி தகவல் கிடைத்ததும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அழைத்துவந்து சோதனை செய்தோம். ரசாயன வாயு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய கருவிகள் பொருத்தினார்கள். 24 மணிநேர சோதனையில் கண்டறிந்தோம். சிபிசிஎல் நிர்வாகம் முதலில் மறுத்தார்கள். பின்னர், ஆதாரத்துடன் அவர்களிடம் பேசியதால், ஒத்துக்கொண்டார்கள், என்கிறார் எம் எல் ஏ சேகர்.


இரண்டு காற்று தர மானிட்டர்களை நிறுவவேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதை குறித்து சிபிசிஎல் நிறுவனம் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.