Chembarambakkam Tank: "செம்பரம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஏரியில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்"

Continues below advertisement

டிட்வா புயல்  - Ditwah Cyclone 

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கிட்டத்தட்ட நிலையாக இருந்தது.

நேற்று, இரவு 11.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் மையம் கொண்டது. அதாவது சென்னை (இந்தியா) க்கு கிழக்கே சுமார் 50 கிமீ, புதுச்சேரி (இந்தியா) க்கு வடகிழக்கே 140 கிமீ, கடலூர் (இந்தியா) க்கு வடகிழக்கே 160 கிமீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 170 கிமீ. வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையத்தின் குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கிமீ ஆகும். இது மெதுவாக தென்மேற்கு நோக்கி வளைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

செம்பரம்பாக்கம் ஏரி - Chembarambakkam Lake 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (01-12-2025) நீர் இருப்பு 21.58 அடியாகவும், கொள்ளளவு 3007 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1000 கன அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மழை முன்னறிவிப்பு என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 3.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று குன்றத்தூரில் மூன்று 3.35 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 2.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 5.4 மில்லி மீட்டர் மழையும், உத்திரமேரூரில் 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை இன்று (02-12-2025) மாலை வரை கனமழைக்க வைத்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.