Tamil Nadu Weather Forecast: "காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது"

Continues below advertisement

டிட்வா புயல் நிலவரம் என்ன ?

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலானது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுநிலையாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் மற்றும் வடக்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கிட்டத்தட்ட நிலையாக இருந்தது.

நேற்று, இரவு 11.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் மையம் கொண்டது. அதாவது சென்னை (இந்தியா) க்கு கிழக்கே சுமார் 50 கிமீ, புதுச்சேரி (இந்தியா) க்கு வடகிழக்கே 140 கிமீ, கடலூர் (இந்தியா) க்கு வடகிழக்கே 160 கிமீ, நெல்லூருக்கு தென்கிழக்கே 170 கிமீ. வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் மையத்தின் குறைந்தபட்ச தூரம் சுமார் 35 கிமீ ஆகும். இது மெதுவாக தென்மேற்கு நோக்கி வளைந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் வாய்ப்பு உள்ளது.

Continues below advertisement

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - Red Alert 

இன்று (02-12-2025) காலை 10 மணி வரை காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை (மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும்) விடப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டிருந்தாலும் வேலைக்கு செல்பவர்கள், இந்த மழையால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.