காஞ்சிபுரத்தில் கனமழை
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று  மாலை நேரங்களில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து கொட்டியது.



காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் அளவு ?


நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த மழை அளவு ?


காஞ்சிபுரம்  63. 40 மில்லி மீட்டர் மழை


வாலாஜாபாத் பகுதியில் 25 .40 மில்லி மீட்டர்


ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 16.40 மில்லி மீட்டர் 


குன்றத்தூர் பகுதியில் 22 மில்லி மீட்டர்


செம்பரம்பாக்கத்தில் 6.80 மில்லி மீட்டர்


செம்பரம்பாக்கம் பகுதியில் மழை


இதனால் செம்பரம்பாக்கம் ஏரி உள்ள பகுதிகளில் மழை பெய்தது ( 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது).  இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 278 கன அடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில்  20 .17  அடியாக நீர் இருப்பு உள்ளது. அதன்படி, மொத்தம் 2.645 டிஎம்சி நீர் உள்ளது. மெட்ரோ உள்ளிட்ட தேவைக்காக அணையிலிருந்து 139 கன அடி நீர் வெளியே செல்கிறது. அதேபோன்று சென்னை குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய புழல் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளிலும் தேவையான அளவு தண்ணீர் இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



 தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக


24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2023 மதல் 29.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஊருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக்கடல் பகுதிகள்:


26.09.2023 மற்றும் 27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.