இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்தது. அதனை தொடர்ந்து பல அதிரடி முன்னெடுப்புகளை எடுத்து வருவதை காண முடிகிறது. தற்போது அதன் ட்விட்டர் பக்கத்தில் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து வெளியிடும் சாலை விதி மீறல்களுக்கு அபராதம் விதித்து அங்கேயே பில்லையும் பதிவிட்டு வருவதை காண முடிகிறது.
பின்னிருக்கை ஹெல்மட்
இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்பவர்களும் ஹெல்மட் அணிவது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் ஹெல்மெட் அணியாத பின் இருக்கை நபரின் மீது வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்
12 நாளில் இத்தனை லட்சம்
சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஊரறிய 21,984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18 ஆயிரத்து 35 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் 21 லட்சத்து 98 ஆயிரத்து 400 ரூபாயை வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்துள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் கடந்த 12 நாட்களில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்