செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா வரும் நீர்நிலை ஆக்கிரமிப்பு மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை கேட்டு அதன் மூலம் வழக்கு தொடர்ந்து சமூகப் பணியாற்றி வருகிறார்.


Abp Nadu Exclusive : மேல்மருவத்தூர் : நீர்நிலை ஆக்கிரமிப்பில் அடிகளார் குடும்ப திருமண மண்டபம்.. வெளியான ஆர்.டி.ஐ தகவல்



இந்நிலையில் நீலமேகம் என்பவரின் மகன் கணேஷ். இவர்  2014 ஆம் ஆண்டில் இருந்து சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த  ராஜா  என்பவர்
 நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் 11.01.2022 ஆம் தேதி அன்று வழக்கம் போல் காலை 09.00 மணிக்கு கணேஷ் தனது அண்ணன் மகன் கனிஷ்வர் என்பவரை அழைத்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சோத்துப்பாக்கம் அரசினர் மேல்நிலை பள்ளிக்கு சென்ற போது ஆதிபராசக்தி காலேஜ் ஆர்ச் தாண்டி சென்ற போது கணேஷுக்கு எதிர் திசையில் வந்த பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமார் என்பவர் வந்த‌ போது கணேஷை பார்த்து அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர்களிடம் கையை காட்டிவிட்டு சென்றுள்ளார்.


இந்த நிலையில் கணேஷ் தனது அண்ணன் மகனை பள்ளியில் விட்டு விட்டு மீண்டும் காலேஜ் ஆர்ச் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி வந்த போது பெயர் விலாசம் தெரியாத அடையாளம் தெரிந்த 4 நபர்கள் கணேஷின் மடக்கி நீ என்ன ராஜா கூட இருந்தா. பெரிய ஆளா, நீங்க ஊரிலே. இருக்க மாட்டீங்க, உங்கள காலி பண்ணாம விடமாட்டோம் என கூறி சிவப்பு நிற உடையில் இருந்த அவர்களில் ஒருவர் தன் கையில் இருந்த லட்டியால் கணேஷின் தலையில் அடித்துள்ளார்.



கணேஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா தெரிவிக்கையில், தன்னுடைய அலுவலக ஊழியர் தாக்கப்பட்டதற்கு விவகாரம் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், தன்னுடைய உயிருக்கும் ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மாவட்டம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு தன்னுடைய உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண