சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் அருண். இவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கப்பலில் பணியாற்றி வருகிறார். இவரது தந்தை தளபதி. (வயது 52) தாய் சண்முகப்பிரியா ( 49). அருண் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தனது வீட்டில் இருந்து தனது தாயின் அலறல் சத்தம் வருவதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியில் உடனே வீட்டிற்குள் ஓடியுள்ளார்.
அங்கே, தனது தாய் சண்முகப்பிரியாவை தனது தந்தை தளபதி கத்தியால் சரமாரியாக குத்தி தாக்கிக்கொண்டிருந்தார். தனது மகனை கண்ட தந்தை தளபதி உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து, உடனே தனது தாய் சண்முகப்பிரியாவை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அருணின் தந்தை தளபதியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தளபதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், “எனக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் மதுவிற்கு அடிமையாக இருந்தேன். இதனால், எனது மனைவி என்னிடம் சண்டையிட்டுக்கொண்டு என்னைவிட்டு பிரிந்து அவளது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டாள். கடந்த 4 மாதமாகத்தான் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தாள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவியிடம் சாப்பாடு போடுமாறு கேட்டேன். அதற்கு அவள், ‘வேலைக்கு போகாமல் இருக்கும் உனக்கு சாப்பாடு எல்லாம் ஒரு கேடா?’ என்று தரக்குறைவாக பேசினாள். இதனால், எனக்கு கோபம் வந்தது. பின்னர், எனது மனைவி கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு படுக்கை அறைக்கு சென்றேன். அங்கே இருந்த எனது மனைவியை பார்த்த எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
இதனால், அங்கே இருந்த கத்தியை எடுத்து எனது மனைவி சண்முகப்பிரியாவின் மார்பில் சரமாரியாக குத்தினேன். அப்போது, எனது மகன் என் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டு என்னை தடுத்தான். நான் பயந்து சுனாமி குடியிருப்புக்குள் சென்று பதுங்கியிருந்தேன். ஆனால், என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.”
இவ்வாறு அவர் கூறினார். மீனவரான தளபதி கப்பலில் ஊழியராக பணியாற்றி வந்தவர். மகன் கண்முகன்னே தாயை தந்தையே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க :முகம் தெரியல.. தழும்பு தெரியுது! ஆபாச தளத்தில் காதலியுடன் இருந்த அந்தரங்க வீடியோ! இளைஞர் ஷாக்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்