தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் போலீசார் கடந்த அக்டோபர் மாதம் நள்ளிரவில் கைது செய்தனர்.


பெண்கள், மதங்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு


பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முஸ்லிம், கிருத்துவ மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் அருவறுக்கத்தக்க கருத்துக்களை கல்யாணராமன் தொடர்ந்து பரப்பி வருவதாக, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான எம்.கோபிநாத் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். 


குண்டர் சட்டத்தில் கைது


மேலும், அவருக்கு எதிராக கோபிநாத் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, அவரைக் கைது செய்தது. பின்னர் அவரை அக்டோபர் 23ஆம் தேதி  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.


முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வானது, கல்யாணராமனின் குண்டாஸை ரத்து செய்து உத்தரவிட்டது. 


3 மாதத்தில் குற்றப் பத்திரிகை


இந்த நிலையில், முன்னதாக கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், அவதூறாகப் பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் அளித்த  நிபந்தனை வாக்குறுதியை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை கல்யாணராமன் வெளிப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


எனவே கல்யாணராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும், மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கேட்டுக்கொண்டிருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மூன்று மாதங்களுக்குள் கல்யாண ராமனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


மேலும் படிக்க: Nupur Sharma Case: ”உங்களுக்கு சிகப்பு கம்பளம் போட்டிருக்கணுமே..” : நுபுர் ஷர்மா வழக்கறிஞரை கடிந்த உச்சநீதிமன்றம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண