தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது. தொடர் பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில் 2 துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.




காஞ்சிபுரம் கே.வி துணை மின் நிலையம் மற்றும் 33/11 கே.வி துணை மின் நிலையங்கள் - மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மின்தடை அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 02.07.2022 சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரத்தை சுற்றியுள்ள சில பகுதிகளான ஒலிமுகமதுப்பேட்டை வெள்ளைகேட், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், நெட்டேரி, சி.வி.எம். நகர், ஜே.ஜே.நகர், புதுநகர், ஈஞ்சம்பாக்கம், விஷகண்டிகுப்பம், மோட்டூர், செம்பரம்பாக்கம், செட்டியார்பேட்டை, பொன்னேரிக்கரை, அன்னை தெரசா நகர், ஆரியபெரும்பாக்கம், புதுபாக்கம், பெரியகரும்பூர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 02.07.2022 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது




அதேபோல காஞ்சிபுரத்தில் உள்ள  33/11 KV உட்புற துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வரும் 02.07.2022 சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் மாமல்லன் நகர், மின் நகர், திருக்காலிமேடு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, காமாட்சி அம்மன் கோவில் சார்ந்த பகுதிகள், வைகுண்ட பெருமாள் கோவில் சார்ந்த பகுதிகள், ரயில்வே ரோடு மற்றும் காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் 02.07.2022 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண