திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி (47). பாரதிய ஜனதா கட்சியின் ஆதி திராவிடர் பிரிவின் வாணியம்பாடி நகர நிர்வாகி பதவிவகிக்கும் இவர் வாணியம்பாடி பகுதியில் ஃபைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட்  தொழில்களும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவிக்கு 1 ஆண் மற்றும்  1 பெண்குழந்தை இருந்த  நிலையில் முதல் மனைவி இறந்ததால், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, 2  மகள்களையும் பாரதியிடம் ஒப்படைத்து விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார் .



குற்றவாளி பாரதி 


 


இரண்டாவது மனைவி பிரிந்துசென்றதால் பாரதி , மூன்றாவது திருமணம் செய்துகொண்டு, மூன்றாவது மனைவிக்கும் 2 பெண் குழந்தைகள் இருந்த நிலைமையில் , அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்றாவது மனைவியையும் கைவிட்டு, கடந்த 9 வருடங்களுக்கு முன்னதாக ஏற்கனவே திருமணம் ஆகி கணவனால் கைவிடப்பட்ட நிலையில் ஒரு பெண்குழந்தை உடன் வசித்து வரும் ஜீனத் என்ற பெண்மணியுடன் தொடர்பு ஏற்பட்டு அவரை நான்காவது திருமணம் செய்து கொண்டார் குற்றவாளி பாரதி.


அவரது முதல் மூன்று மனைவிக்கு பிறந்த ஒரு ஆண்குழந்தை மற்றும் ஐந்து பெண் குழந்தைகளும் ஜீனத்தின் 11 வயது பெண் குழந்தை என மொத்தம் 7 குழந்தைகளும் ஜீனத்தின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில் செவ்வாய் இரவு மதுபோதையில் இருந்த பாரதி, அவரது வளர்ப்பு  மகளான ஜீனத்தின் 11 வயது பெண்குழந்தை தூங்கிக்கொண்டு இருக்கும்பொழுது பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார் .


தூக்கத்தில் இருந்து அரண்டு எழுந்த அந்த சிறுமி அருகில் படுத்திருந்த தனது தாயிடம் நடந்ததை அழுதுகொண்டே விவரித்துள்ளார். மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி மிகவும் ஆத்திரப்பட்ட ஜீனத் , மறுநாள் புதன்கிழமை வாணியம்பாடி அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதி மீது புகார் அளித்துள்ளார். புகாரினை விசாரித்த வாணியம்பாடி அணைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி பாரதி மீது போக்சோ உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைப்பதற்காக கொரோனா பரிசோதனை செய்ததில், அவரது பி சி ஆர் பரிசோதனை அறிக்கையில் 60  சதவீதம் கொரோனா தோற்று பாதிப்பு உள்ளதாக பரிசோதனை முடிவில் தெரியவந்தது.


வழக்கு பதியபட்ட நிலையில்  குற்றவாளி பாரதி போலீஸ் பாதுகாப்புடன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இது தொடர்பாக நாம் வேலூர்  மாவட்ட குழந்தைகள் நல அலுவலரை தொடர்பு கொண்ட பொழுது “நடுவண் அரசின் , பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி சிறு குழந்தைகள், குறிப்பாக 5 முதல் 12 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் அதிகளவில் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 



குற்றவாளி பாரதி 


 


உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் உணர்வு ரீதியான அத்துமீறல் என்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வரையறுத்திருக்கும் மத்திய அரசு, தமிழகம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தேசிய அளவில் ஆறாம் இடத்தில் உள்ளதாக ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது .


கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் , குறிப்பாக பாலியல் சீண்டல்கள் 250 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கும் தேசிய குற்ற பதிவுகள் ஆணையம் , இதில் 95 சதவீதத்திற்கும் அதிகமான குற்றங்கள் , பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நெருங்கிய உறவினர்கள்  , பக்கத்துவீட்டார்கள் போன்றவர்களால்தான் இந்த கொடூர வன்முறைகள் அரங்கேற்றப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளது”. என்று தெரிவித்த குழந்தைகள் நல அலுவலர் , குழந்தைகளுக்கு இது போன்ற சூழ்நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு பெற்றோர்கள்தான் சற்று கவனமுடனும், எச்சிரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் சீண்டல்களை புகார் செய்ய 1098 என்ற இலவச சேவை எண்ணைத் தொடர்புகொண்டு புகார்களை தெரியப்படுத்தலாம் என்று தெரிவித்தார் .