விமான நிலைய விரிவாக்க பணி

 

சென்னையில் புறநகர் பகுதியாக , காஞ்சிபுரம் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. சென்னை புறநகர் பகுதியாக இந்த பகுதி உள்ளதால், அதிதீவிர வளர்ச்சியை அடைந்து வருகிறது.  கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையின் ஒரு பகுதியில் சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளதால், விமான நிலைய விரிவாக்க பணிக்காக இங்குள்ள சில வீடுகளை கையகப்படுத்த போவதாக ஏற்கனவே விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

 



146 வீடுகளின் உயரத்தை குறைப்பதற்காக

 

இந்தநிலையில், விமானம் தரை இறங்குவதற்காக இங்குள்ள ஒரு பகுதியில் வீடுகளின் உயரம் இடையூறாக இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 146 வீடுகளின் உயரத்தை குறைப்பதற்காக நோட்டீஸ் வழங்கி உள்ளனர். குறிப்பாக இடத்திற்கு ஏற்றாற்போல, ஒவ்வொரு வீடும் 5 மீட்டரில் இருந்து 9 மீட்டர் வரை உயரம் குறைக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும்

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொளப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் குடியிருப்புகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி எசுபாதம் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது மட்டுமின்றி இங்குள்ள விமான நிலைய விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை கையகப்படு்த்த கூடாது எனவும் அதற்கு தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் ?

 

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து மேலும் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள நிலையில், இங்குள்ள குடியிருப்புகளின் உயரத்தை ஏன் குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். 146 வீடுகளின் உயரத்தை குறைக்க அளித்திருக்கும் நோட்டீசில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வீட்டின் உயரங்களை குறைக்க வலியுறுத்தி வரும் விமானத்துறை அதிகாரிகள் அதற்கான இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் எனவும், தொடர்ந்து, இந்த குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டா,ல் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 



Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண