சென்னையை அடுத்த ஆவடியில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆவடி காவலர் ஆணையகரத்தில் ஆயுதப்படை காவலர் சரவணகுமார் தற்கொலை செய்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் விளையாட்டில் அதிகமாக பணத்தை இழந்ததால் ஆயுதபடை காவலர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
சிவகங்கை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த இவர் ஆவடி பூம்பொழில் நகரில் நேரு தெருவில் தங்கி காவல் துறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா என்பவருடன் சமீபத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.
இவர் மத்திய அரசின் தொலை தொடர்பு சிறப்பு நிறுவனமான இந்த நிறுவனத்தின் தொலைத்தொடர்பு இணையங்களை கண்காணிக்கும் பணியானது இங்கு நடைபெற்று வருகிறது.அந்த வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலரான சரவணகுமார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பணியில் இருக்கும் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் தற்போது காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அம்ம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ் உதவி ஆணையர் கனகராஜ் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்