Jayakumar on OPS ; ”கொசுவ பத்தி பேசாதீங்க! நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கு ”கிண்டலடித்த ஜெயக்குமார்

Jayakumar : கொசுக்களை பற்றி பேசாதீங்க என்று ஓபிஎஸ் சை கொசுவாக கிண்டல் செய்த ஜெயக்குமார்

Continues below advertisement

சிங்கார வேலர் பிறந்தநாள் - மரியாதை

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் 166வது பிறந்த நாளை ஒட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவ படத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Continues below advertisement

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் ;

சென்னையில் பிறந்து சட்டம் படித்து சட்ட உதவி செய்தவர்  சிங்கார வேலரின் சொத்துக்களை ஏழைகளுக்காக தியாகம் செய்தவர். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். சிந்தனை சிற்பி சிங்கார வேலருக்கு அதிமுக ஆட்சியில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் பெயரில் விருதும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

ஓ.பி.எஸ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து குறித்த கேள்விக்கு ; 

தேசிய கல்விக் கொள்கை  என எத்தனையோ இருக்கும் போது கொசுக்களை பற்றி பேசாதீங்க என்று ஓபிஎஸை கொசுவாக கலாய்த்த ஜெயக்குமார் , அவர் ரகசியம் என்று எதோ சொல்கிறார் ரகசியம் என்ற வார்த்தை வந்தாலே யார் யாரோடு தொடர்பு என்று தெரியும். நீட் ரகசியம் என்றால் உதயநிதி. திமுகவோடு தொடர்பு இருக்கிறது என்ற நோய் தொற்று கொண்டது. அதனால் தான் எனக்கு அந்த ரகசியம் தெரியும் என்கிறார். 

ரகசியம் தெரிந்தால் அதை சொல்லுங்கள். ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலை தான் 4 ஆண்டுக்கு மேலாக ஓபிஎஸ் & அவர் வகையறாக்களும் செய்வதாகவும் , அது நிச்சயம் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது. 

மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு ,

அதிமுகவை பொறுத்த வரை  இரு மொழிக் கொள்கை. மொழியை திணிக்க கூடாது. இந்தி தேவையில்லை., அதை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் இந்தியை திணிக்காதீர்கள். 

தமிழ் அடுத்து மாநிலத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழி. தமிழ் தாய் மொழி. ஏந்த நிலையிலும் தாய்மொழி அழியக் கூடாது. அதை பேணி காக்க தான் இத்தனை வருடம் போராடி வருகிறோம். அந்த வகையில் ஒரு மொழியை திணிப்பதை தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக இன்றைக்கு கூட , ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது எவ்வளவு பெரிய கில்லாடித்தனம் , மோசடி. தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயல். போராட்டம் நடத்துவது போல் திமுக அரசு சந்தர்ப்பமாக இரட்டை வேடம் போடுகிறது.

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் 11 லட்சம் கோடி கொடுத்ததாக சொல்கிறார். அது யாருடைய பணம். மக்களுடைய வரிப்பணம் தானே. 
மக்கள் செலுத்தும் வரிக்கு ஏற்ப திரும்பி கொடுத்தீர்களா ? அதே மத்திய இணை அமைச்சர் எல் முருகன், உ.பி., பீஹார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்பதை சொன்னால் ( தென் மாநிலங்கள்) தவிர பரவாயில்லை.

11 லட்சம் கோடி என பேசுபவர் , உ.பி, க்கு எத்தனை லட்சம் கோடி என்று சொல்லுங்கள். 100 சதவீதம் நிதி கேட்டால் 10, 15 சதவீதம் நிதி தான் கொடுக்கிறார்கள். ஆனால் குஜராத்திற்கு தூக்கி கொடுப்பார்கள் எனவும் ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல மத்திய அரசின் போக்கு இருந்தால்,மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி தருகிறோம் என்றால் ,  இதை விட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து எதுவுமில்லை.

இதையும் படிங்க: RB Udhayakumar : ஓ.பி.எஸ்-க்கு தகுதி இல்லை! அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்.. ஆர்.பி உதயகுமார் பதிலடி

மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் , ஒரு மொழியை திணித்து அதன் மூலம் நிதி தருகிறோம் என்றால் நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்று தானே மக்கள் நினைப்பார்கள். இன்று ஆளும் அரசு எதுவும் கேட்காது. அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள். 2026 க்கு பிறகு மத்திய அரசுடன் சேர்வதற்கான வாய்ப்புகளும் பேசி விட்டதாகவும் அதனால் அதிகம் பேச மாட்டார்கள். தமிழ்நாடு மக்களை நலன் கருதி நாங்கள் பேசுகிறோம் என்றால் உரிமை. அந்த உரிமையை அதிமுக எப்போதும் விட்டுக் கொடுக்காது..

நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் அழு என்பது தான் திமுக - பாஜக இடையேயான நாடகம். நரேந்திர மோடியை ஸ்டாலின் சந்தித்தார். அடுத்து உதயநிதி சந்தித்தார், என்ன பிரயோஜனம் ? நிதி வாங்கி கொடுத்தீர்களா ? அதிமுக ஆட்சியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இலங்கை, தமிழ்நாடு, மத்திய அரசு அமர்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்க முடியும்.பழவந்தாங்கலில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் எப்படிப்பட்ட காட்டாட்சி தர்பார் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola