பதவிக்காக யார் காலிலும் விழவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு கிடையாது - ஜெயக்குமார்

திமுகவை பொறுத்தவரை இரட்டை நாக்கு , நேற்றொரு கொள்கை , இன்று ஒரு கொள்கை , நாளை ஒரு கொள்கை பதவி சுகத்திற்காக யார் வேண்டுமானாலும் விடுவார்கள் , யார் காலை வேண்டுமானாலும் வாருவார்கள்

Continues below advertisement

 

Continues below advertisement

வருகின்ற 24 - ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மரியாதை செலுத்த உள்ள நிலையில் அதற்கு காவல் துறை பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் ;

பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்தவிதமான சார்பும் இன்றி அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ,

பொதுவாகவே கூட்டணி குறித்து பாஜக அல்லாத கட்சிகள் அது எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதை பொதுச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். 

பாஜகவை பொறுத்தவரைக்கும் பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி உள்ளார். நேற்றும் இல்லை இன்றும் இல்லை நாளையும் இல்லை 2026 தேர்தலில் கூட பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை பலமுறை கழகத்தின் எண்ணத்தை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை பொருத்தவரை தன்மானத்தை விட்டு எந்த அளவிற்கு பல வழக்குகள் போடப்பட்டு அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற வகையில் பாஜகவிடம் சரணடைந்துள்ளார். பாஜகவிடம் சரணடைந்த ஒருவர் பாஜகவிடம் கூட்டணிக்கு வாங்க என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அதிமுகவை பொருத்தவரை தன்மானத்தோடு இயங்கக்கூடிய ஒரு இயக்கம் யார் காலிலும் விழவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.பொதுச் செயலாளரை பொருத்தவரை இந்த நிலைப்பாடு தொடரும். 

நாடாளுமன்றத்தில் அமித்ஷா அம்பேத்கர் குறித்த கருத்து பதில் அளித்த ஜெயக்குமார் , 

போற்றுதலுக்குரிய அம்பேத்கர் அவர்கள் இந்தியா முழுவதும் போற்றக் கூடிய மாபெரும் தலைவர் அரசியலமைப்புச் சட்டத்தை நம் நாட்டிற்கு அளித்தவர் இந்தியா முழுவதும் போற்றக் கூடிய ஒரு தலைவரை போற்றப்பட வேண்டுமே தவிர அவர் புகழை சிறுமைப்படுத்தக்கூடிய செயலை செய்யக் கூடாது. சிறுமைப்படுத்துகின்ற செயலை செய்தால் மக்களைப் பொருத்தவரை நிச்சயமாக அவர்களை நிராகரிப்பார்கள். அமித்ஷாவின் பேச்சு என்பது பல தரப்பட்ட ஏற்றுக் கொள்ளாத நிலையில் பாஜகவிற்கு தான் பின் விளைவு கடுமையாக இருக்கும்

கே.என் நேரு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் , 

திமுகவை பொறுத்தவரை இரட்டை நாக்கு நேற்றொரு கொள்கை இன்றி ஒரு கொள்கை நாளை ஒரு கொள்கை பதவி சுகத்திற்காக யார் வேண்டுமானாலும் விடுவார்கள்.

யார் காலை வேண்டுமானாலும் வாருவார்கள் அதிமுகவை பொருத்தவரை அந்த நிலை என்றைக்குமே இருந்தது கிடையாது. 

ஸ்டாலின் அவர்களின் அப்பா முதலமைச்சராக இருந்த போது சர்க்காரியா கமிஷனை கண்டு பயந்தது யார் அன்றைக்கு பயந்து காவிரி உரிமை பிரச்சனையில் காவிரி உரிமையை விட்டுக் கொடுத்தார். 

பச்சைக் கொடி காட்டி கச்சை தீவை தாரை வார்த்தவர்கள் , முல்லைப் பெரியாறு பிரச்சனை மத்திய அரசுக்கு பயந்து உண்ணாவிரதத்தை வாபஸ் வாங்கி விட்டு வந்தார். 

தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்து விட்டு மகனுக்கு முடிசூட்டி விட்டோம் என்ற ஆனந்தத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார் தமிழ்நாடு எக்கேடு கெட்டுப் போனாலும் அவருக்கு கவலை இல்லை.

கள்ளக் குறிச்சி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் திமுக அரசிற்கு மிகப்பெரிய குட்டை வைத்துள்ளது. 

சிபிஐ பயந்து மேல்முறையீடு சென்று இருக்கிறார்கள் ஆக உச்சநீதிமன்றமே பயத்திற்கு சொந்தக்காரர்கள் யார் என்பதை தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் செல்லக் குழந்தை உதயநிதி நல்ல பிள்ளை ஸ்டாலின். 

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் ,

ஒரே நாடு ஒரே தேர்தல் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது கூட்டு குழு கூடும் பொழுது எங்களுடைய முடிவை நாங்கள் தெரிவிப்போம் என்றார்.

Continues below advertisement