சென்னை மகாபலிபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2000 மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல இருபுறங்களிலும் செஸ் ஒலிம்பியா போட்டி நடைபெறும் இடத்தில் கொடிகள் நடப்பட்டுள்ளது.
இந்த பேனரில் முதல் கொடியாக ஆப்கானிஸ்தான் நாட்டு கொடி பொறிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது தலிபான்கள் பயன்படுத்தும் கொடி ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியாக பொறிக்கப்பட்டு இருந்தது.
இதே போல ஆப்கானிஸ்தான் நாட்டை குறிக்கும் வகையில், தாலிபான்கள் கோடி நடப்பட்டிருந்தது. இந்தக் கொடி கம்பத்தை பிடித்தபடி தலிபான் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுவதும் இருக்கும் தலிபான் ஆதரவாளர்களிடையே வேகமாக பரவி சமூக வலைதளத்தில் உலா வந்து கொண்டிருந்தது. ஆனால் உலக அரங்கில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பழைய கொடியான மூவர்ண கொடியை பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பொழுது வீரர்கள் பெயருக்கு மேல் நாட்டின் பெயர் கொடியுடன் பொறிக்கப்பட்டிருக்கும், அதில் ஆப்கானிஸ்தானின் மூவர்ணக் கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது ஆனால் அரங்கிற்கு வெளியே தலிபான்கள் கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது தலிபான்கள் கொடி மறைக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கொடி
ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 20 ஆண்டுகள் போர் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் அமெரிக்கா படை வெளியேறியதில் இருந்து சில மாதங்களிலே முடிவடைந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் ஆட்சியை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் 2013ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்த கொடியை அகற்றிவிட்டு , முதல் தங்களது அமைப்பின் கொடியை ஆப்கானிஸ்தானின் தேசிய கொடி என அறிவித்துள்ளனர்.
ஆனால் உலக அரங்கில் நடைபெறும் பல சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் பழைய கொடியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டியில் அரங்கிற்கு வெளியே தலிபான்களின் கொடி பயன்படுத்தப்பட்டது, தற்பொழுது இது மறைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்