தவெக கொடியுடன் சென்ற இளைஞர்கள்


சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். 


அப்பொழுது எதிர் திசையில் எம்.சாண்ட் மணலுடன் லாரி ஒன்று வந்துள்ளது. அப்பொழுது டி.எம்.எஸ் ரயில் நிலையம் அருகே திரும்பிய போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 


சம்பவ இடத்திலேயே பலி


இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் இரு சக்கரம் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.


ஹெல்மட் இல்லாமல் சென்ற இளைஞர்கள்


தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றதாகவும் இரு இளைஞர்களும் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக , மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் தலைகவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.