மெட்ரோ ரயில் நிலையம் இணைப்பு பேருந்து

Continues below advertisement

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சாலை மார்க்கம் மட்டுமின்றி மெட்ரோ, மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 20 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பயணியர் தேவை அதிகமாக இருப்பதால் , மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் 220 மின்சார 'ஏசி' சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது ; 

Continues below advertisement

சென்னை மெட்ரோ நிலையங்களில் ரயில் இருந்து மாநகர போக்குவரத்து கழகம் வாயிலாக முக்கிய ரயில், பஸ் நிலையங்கள், குடியிருப்புகள், தனியார் ஐ.டி., நிறுவனங்களை இணைக்கும் வகையில் 220 ஏசி சிற்றுந்துகள் இயக்க முடிவு செய்துள்ளோம்.

ஆலோசனை கூட்டத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. தற்போது, 16-20 அடி நீளமுள்ள மின்சார சிற்றுந்துகளை உடனடியாக தயாரிக்கவும், இயக்கவும் சாத்தியம் குறைவாக உள்ளது. ஆனால், 23 அடி நீளமுள்ள 'ஏசி' சிற்றுந்துகளை உடனே தயாரித்து இயக்க முடியும் என ஓரிரு நிறுவனங்கள் தெரிவித்தன.

எனவே மொத்தமுள்ள 220 சிற்றுந்துகளில், 70 மட்டும், 23 அடி நீளம், 6.5 அடி அகலம் உடைய சிற்றுந்துகளாக இயக்க முடிவு செய்துள்ளோம். எஞ்சியுள்ள 150 சிற்றுந்துகள், 18 அடி நீளமும், 6 அடி அகலமுடையதாக இருக்கும். இந்த சிற்றுந்துகளை இரண்டாம் கட்டமாக இயக்க உள்ளோம்.

அது போல் சைதை, பல்லாவரம், விம்கோநகர் உட்பட ஐந்து இடங்களில், சிறப்பு பணிமனைகள் அமைக்கப்படும். முதல் கட்டமாக தேர்வு செய்யப்படும், 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து, 5 கி.மீ., துாரத்துக்கு, 'ஏசி' சிற்றுந்துகள் இயக்கப்படும். காலை 7:00 முதல் இரவு 11:00 மணி வரை, 5 நிமிட இடைவெளியில், ஒரு சிற்றுந்து இயக்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.