தமிழகத்தைப் பொருத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவும் மழை பெய்வதும், அவ்வாறு சில ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக மழை பெய்யும் போது வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிப்படைவது வழக்கம். இந்த பாதிப்பு மனிதர்களுக்கு மட்டும் இல்லாமல் கால்நடைகளுக்கும் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக மாடுகளுக்கு மழையால் கோமாரி உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது. மாடுகளுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கோமாரி நோய் தடுப்பூசி, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசின் கால்நடைத்துறை மூலம் செலுத்துவது வழக்கம். மாடுகளின் கால் குழம்பு, வாய், மூக்கு பகுதியில், புண்கள் ஏற்படுத்தும் கிருமிகளை கொள்வதற்கும், மாடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இந்த தடுப்பூசி மாடுகளுக்கு செலுத்தப்படுகிறது.


Cows are at risk of dying in Tamil Nadu as the syphilis vaccine has been discontinued for more than a year


தமிழகத்தில், கடந்த, ஒரு ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்துவதை கால்நடைத்துறை நிறுத்தி வைத்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் பருவ மழை துவங்கி விட்ட நிலையில், நீர் நிலைகள் நிரம்பி வருவதோடு, மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்து தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் மேயும் மாடுகள் கோமாரி நோயின் பிடியில் சிக்கி உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.



ஒரு வருடமாக போடப்படாத கோமாரி நோய் தடுப்பூசிகள் - மீண்டும் தொடங்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை


மாடுகளை காக்க வெளி சந்தையில் தடுப்பூசி 50 mm மருந்தின் விலை சுமார்   500  ரூபாய்க்கு விற்கப்படுகிறது அவ்வாறு வெளியில் வாங்கினால், 10 மாடுகளுக்கு செலுத்தலாம்.  மருத்துவர் கொடுக்க வேண்டிய செலவு உள்ளிட்டவை வைத்து பார்த்தால் ஒரு மாட்டிற்கு செலுத்துவதற்கு சுமார் 100 லிருந்து 150 ரூபாய் வரை செலவாகும். பத்திற்கும் மேற்பட்ட மாடுகள் வைத்திருப்பவருக்கு இந்த மருந்தை பயன்படுத்தி ஊசி போடலாம். ஆனால்  1 அல்லது 2 மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகளும் 500 ரூபாய் மதிப்புள்ள மருந்து வாங்கி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது . அதனால் ஒரு மாட்டிற்கு 700 ரூபாய் வரை செலவாகிறது . இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துவக்க அரசு உடனடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

 


 

இது குறித்த செய்தி நமது ஏபிபி நாடு இணைய தளம் மற்றும் யூடியூப்பில் வெளிவந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கோரிக்கையை கவனத்திற்கு கொண்டு சென்றது. இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் மீண்டும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமம் தோறும் தற்போது கோமாரி நோய் தடுப்பூசி முகாம்கள்  நடைபெறத் தொடங்கி உள்ளன.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர