மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கை சமாளிக்க நாப்கின்னை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது சந்தைகளில் பெரிதளவில் நாப்கின் விற்பனை ஆகி வருகிறது. ஆனால் தற்போது சந்தைகளில் விற்கப்படும் நாப்கின்களில் பிளாஸ்டிக் படலம் உபயோகிக்கப்படுவதால் இந்த நாப்கின்களே வேறு சில பிரச்சனைகளுக்கும் வழி வகை செய்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இந்த நாப்கின்களில் சில ரசாயணங்கள் சேர்க்கப்படுவதால் கிருமி தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு மாற்று தீர்வாக அரசாங்கம் பெண்களுக்கு பிரச்சினை இல்லாத வகையில் சானிடரி நாப்கின்களை தயாரிக்கும் பயிற்சிகளை மகளிர் குழுக்கள் மூலம் கொடுத்து அதனை அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராதிகா கடந்த 2010 ஆண்டில் மகளிர் குழுவில் இணைந்து நாப்கின் தயாரிப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
பயிற்சி முடித்து விட்டு நாப்கின் தயாரிப்பில் சுயதொழில் ஆரம்பித்துள்ளார். தொழில் ஆரம்பித்து ஏற்றம் பெற்று சில சருக்கல்களையும் சந்தித்து இருந்தாலும் இந்த தொழிலே தனக்கு திருப்தி அளிப்பதாக தெரிவிக்கிறார். இதன் காரணமாகவே தொழிலையும் செய்து கொண்டு அதேசமயம் சுமார் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கு நாப்கின் தயாரிப்பு பற்றிய பயிற்சிகளை அவ்வப்போது அளித்து வருகிறார்.
இவரிடம் பயிற்சி பெற்ற பெண்களில் இது வரை 18 பெண்கள் வெற்றிகரமாக நாப்கின் தயாரிப்பு தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இவர் தயாரிக்கும் நாப்கின்களில் இயற்கை இடுபொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். 7 வகை மூலிகைகள் மற்றும் ஆவாரம், பூவரசு, கற்றாழை கொண்டு மெல்லிய படலமாக வைத்து நாப்கின் தயாரித்து வருகின்றனர். இதனால் பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தவிர்க்கப்படும் என கூறுகிறார்.
பெண்களுக்கு ஏற்ற எளிமையான சுயதொழில்:
நாப்கின் தயாரிப்பு ஆரம்பத்தில் வீட்டிலேயே தயாரிக்கலாம். தயாரிப்பு நுட்பங்கள், மார்க்கெட்டிங் ஆகியவற்றை முழுமையாகக் கற்றுக்கொண்ட பிறகு பெரிய அளவில் தொடரலாம். மூலப்பொருள்கள் வாங்குவதற்கு குறைந்தது 25 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். பெரிய அளவில் மெஷின்கள் வைத்து தயாரிக்க ஒன்றரை லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். சென்னை தண்டையார்பேட்டை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நாப்கின் தயாரிப்பு மெஷின்கள் கிடைக்கின்றன.
நாப்கின் தயாரிக்கும் அடிப்படைத் தகவல்களை தெரிந்து கொள்ள பயிற்சி முகாம்களில் பங்கேற்க வேண்டும். சிறு மற்றும் குறு தொழில் சேவை மையம், மகளிர் சுய உதவிக் குழுக்களை அணுகினால் தகவல் தருவார்கள். உங்கள் தயாரிப்பு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே மார்க்கெட்டிங் அமையும். முதலில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யலாம். அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப், சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்குக் கொடுக்கலாம். நியாயமான விலை வைத்து, பொருளை தரமாக கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும். உதாரணமாக 10 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட்டில் 15 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.
நாப்கின் தயாரிக்கும் முறை அளவிற்கு தகுந்தது போல் காட்டன் துணி மற்றும் காட்டன் துணியை நறுக்கிக்கொள்ளவும். அதன் பிறகு நறுக்கிய காட்டன் துணியின் மீது மரகூழ் பஞ்சினை வைக்கவும், பின்பு தயார் செய்து வைத்துள்ள மூலிகை பொடியினை இந்த பஞ்சின் மீது சிறிதளவு தூவிவிடவும். பிறகு மறுபடியும் மரக்கூழ் பஞ்சு மற்றும் காட்டனை துணியை வைத்து தையல் மிஷினில் நான்கு பக்கங்களிலும் மடித்து தைக்க வேண்டும். இவ்வாறு ஒரு மூலிகை நாப்கின் தயார் செய்ய ஆகும் செலவு ரூபாய் 20 மட்டுமே.
மாதவிட காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நவீன நாப்கின்களின் விலை அதிகம் என்பதுடன், சுத்தம் என்ற பெயரில் இவற்றில் ஏராளமான ரசாயனங்கள் சேகரிக்கப்படுவதால் கருப்பை நோய்களும் உருவாகிறது. எனவே உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையையும் ஏற்படுத்தாத இந்த மூலிகை நாப்கின் தயார்செய்து விற்பனை செய்யலாம். அதாவது உங்கள் வீட்டு பகுதியில் உள்ளவர்களிடம் விற்பனை செய்யுங்கள், பின்பு அவர்கள் மூலம் பல வடிக்கையாளர்களை பிடித்து விற்பனை செய்யுங்கள். வெறும் 5000 முதலீட்டில் பெண்கள் வீட்டில் இருந்து விற்பனை செய்து நல்ல வருமானத்தை பார்க்கலாம்.