காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் அடுத்துள்ள பேரணக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த வேதகிரி என்பவரின் மக்கள் மத்தியில்  சிங்காரவேலன், கடந்த 22.10.2015 அன்று 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது, சம்பந்தமாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் கிருஷ்ணன்  வழக்கு பதிவு செய்து , சிங்காரவேனை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.




பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்யப்பட்டு, வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் M.சுதாகர் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அஞ்சாலட்சுமி, நீதிமன்ற காவலர் லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் N.புவனேஷ்வரி, ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தி இந்த வழக்கை நடத்தி வந்தனர்.




இந்நிலையில் (22.01.2023), இந்த வழக்கின்  சிங்காரவேலனுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி R.K.P.தமிழரசி,  குற்றம் சாட்டப்பட்ட சிங்காரவேலனை குற்றவாளி என உறுதிசெய்து 15 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம்  மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும். இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் ஆய்வாளர் கண்காணிப்பாளர்  வெகுவாக பாராட்டினார்.


 


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண