செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக உணவு உட்கொள்ளவில்லை.

 






 

இதையடுத்து உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. புலியின் உடல் நிலையை மேம்படுத்த, துணை சிகிச்சையுடன் கூடுதலாக மருத்துவ ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. இரத்த மாதிரிகளின் ஆய்வில் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்ற எதிர்மறை முடிவு வந்துள்ளது. மேலும் பிற மருத்துவ ஆய்வுகள் நடந்து வருவதாக பூங்கா நிர்வாகம்  தெரிவித்துள்ளது.



 

இதுகுறித்து பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 6 வயது ஆண் புலி நகுலன், கடந்த ஏப்ரல் 4-வது வாரத்திலிருந்து சரியாக உணவு உண்ணவில்லை. வழிகாட்டு நெறிமுறையின்படி புலிக்கு உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் புலி நன்றாக இருந்தது. ஆனால், ஜுலை 25 ஆம் தேதி, நகுலன் மீண்டும் பசியின்மை காரணமாக உணவு உட்கொள்ளவில்லை.



 

இதையடுத்து உடனடியாக அறிகுறி சிகிச்சை அளிக்கப்பட்டது. புலியின் உடல் நிலையை மேம்படுத்த, துணை சிகிச்சையுடன் கூடுதலாக மருத்துவ ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர்களால், புலியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகின்றது. இரத்த மாதிரிகளின் ஆய்வில் பிற நோய்களுக்கான கிருமிகள் எதுவும் இல்லை என்ற எதிர்மறை முடிவு வந்துள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .