44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது மாமல்லபுரத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நான்காவது சுற்றில் இந்தியா ஓபன் அணிகள், பலம்வாய்ந்த இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகளை எதிர்கொள்கின்றன. அதேபோல இந்தியாவில் பெண்கள் அணி பலம் வாய்ந்த ஹங்கேரி மற்றும்  ஜார்ஜியா அணிகளை எதிர்கொள்கின்றன. கடந்த மூன்று போட்டிகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தமிழகத்தை சேர்ந்த அதிபன் பாஸ்கரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 

செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், நாங்கள் சிறப்பாக ஆடி வருகின்றோம். நாங்கள் குட்டி பசங்கள் என்பதால் எங்களை பார்த்து பயப்படுகிறார்கள் என விளையாட்டாக கூறினார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு அணி வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் முதலாக டிரா செய்யப்பட்டுள்ளது. எங்கள் அணியை பார்த்து கண்ணு வைத்து விட்டார்கள் அதனால் தான் இப்படி நடந்தது என வேடிக்கையாக கூறினார். இதன் மூலம் அனைவரும் பாயிண்ட் எடுக்க வேண்டும் என நிலை இருக்காது, இதன்பிறகு பிரச்சனை இல்லாமல் விளையாடலாம் என தெரிவித்தார்.

 

 


இந்திய அணிகள் அட்டவணை சுற்று 4



                    பிரான்ஸ் vs இந்தியா


ஜுவல்ஸ் மொசார்டு (ஒயிட்) - பெண்டலா ஹரி கிருஷ்ணா (பிளாக்)


லாரென்ட் ஃபிரெஸ்ஸினெட் (பிளாக்) - விதித் சந்தோஷ் குஜராத்தி (ஒயிட்)


மாத்யு கார்னெட் (ஒயிட்) - அர்ஜூன் ஏரிக்கஸி (பிளாக்)


மாக்ஸிம் லகார்டு பிளாக் - S.L நாராயணன் (ஒயிட்)


      இந்தியா (IND 3) VS ஸ்பெயின் (ESP)


சூர்யா ஷேகர் கங்குலி (ஒயிட்) - அலெக்ஸல் ஷிரோவ் (பிளாக்)


Sp சேதுராமன் (பிளாக்) - பிரான்சிஸ்கோ வலிஜோ போன்ஸ் (ஒயிட்) 


அபிஜித் குப்தா (ஒயிட்) டேவிட் அண்டன் குஜாரோ (பிளாக்)


 முரளி கார்த்திகேயன் (பிளாக்) - ஜெய்மி சண்டோஸ் லடாஸா (ஒயிட்)


        இந்தியா (Ind2) VS இத்தாலி (ITA)


D குகேஷ் (ஒயிட்) - டேனியல் வொகாடுரோ (ப்ளாக்)


நிஹில் சரின் (பிளாக்) - லூகா ஜூனியர் மொரோனி (ஒயிட்)


R பிரக்னானந்தா (ஒயிட்) -  லெரோன்ஸொ லொடிசி (பிளாக்)


ரௌநக் சத்வானி (பிளாக்) -  பிரான்சிஸ்கோ சோனிஸ் (ஒயிட்)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண