செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நாவலுாரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர்  இவர்களுக்கு, இரட்டை பிறவியாக ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகின்றன இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை சுறுசுறுப்பாக இருந்துள்ளது. ஆனால் ஆண் குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக குழந்தை இருந்துள்ளது. மேலும் ஆண் குழந்தையின் கால்கள் அசைவின்றி இருந்துள்ளன .




இதனையடுத்து குழந்தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பரிசோதனைக்கு பின், பெங்களூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில், குழந்தைக்கு பரிசோதனை நடத்தப் பட்டது. அதில், மரபணு பாதிப்பால் ஏற்படும் எஸ்.எம்.ஏ., டைப் - 1 என்ற தசைநார் சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்ததுள்ளது . குழந்தையின் உயிரைக் காக்க வேண்டும் என்றால் அடுத்த சில மாதங்களில் சுமார் 16 கோடி மதிப்புள்ள அந்த குறிப்பிட்ட ஊசி செலுத்த வேண்டும் என மருத்துவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் செய்வதறியாமல் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.




இதுக்குறித்து குழந்தையின் தாய் ஜெனிபர்கூறுகையில் , குழந்தைக்கான ஊசி மருந்து மட்டும், 16 கோடி ரூபாய் என்கின்றனர். அது தவிர மருந்து செலவு இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தையை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார். மிகவும் அரிதான இந்நோய்க்கான மருந்தை, வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஊசி மருந்தின் விலை 16 கோடி ரூபாய். 2 வயதுக்குள் செலுத்தா விட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.



மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு,  ஆண்ட்ரூசை, 90030 99823, 73054 11803 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9790268319 ,7397395122



உங்களுடைய பங்களிப்பை அளிக்க: 



 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.