மார்கழியில் மக்களிசை என்ற தலைப்பில் மதுரை, கோவை, சென்னை என பல்வேறு  இடங்களில் இசை  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தாரை தப்பட்டை, மேளம் மற்றும் கரகாட்டம், ஒப்பாரி, பாடகர்கள் கலந்துகொண்டு மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.



 



இந்நிலையில் கடந்த 8 நாட்களாகச் சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும் மார்கழியில் மக்களிசை இன்றோடு முடிவடைகிறது. இறுதி நாளான இன்று, கனிமொழி எம். பி. அவர்கள் கலந்துகொண்டு பேசியபோது, "இந்த சபாவில் பல நிகழ்ச்சிகள் நடந்து இருக்கும், இந்த நேரம், இந்த சபாவில் அமைதியாகப் பாடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் இன்று மார்கழியில் மக்களிசையில் மேடையே அதிருகிறது. எல்லா வருடமும் இதே வீரியத்தோடு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும், நமது உரிமைகளை அது மீட்க வேண்டும்" என்று உரையாற்றி அரங்கத்தை அதிரவைத்தார்.



 



நிகழ்ச்சியில் தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றுவரும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தமிழக மக்களுக்காக ஒலிக்கும் ஒரே பெண் குரல் - என நீலம் பண்பாட்டு மையம் புகழாரம் சூட்டியுள்ளது.