சென்னையின் அடையளங்களுள் ஒன்றாக இருந்த உதயம் திரையரங்கம் கடந்த சில மூடப்பட்ட நிலையில் தற்போது வடசென்னையின் முக்கிய ஆங்கமாக இருந்த பெரம்பூர் ஸ்ரீ பிருந்தா திரையரங்கமும் மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீ பிருந்தா திரையரங்கம்:
பெரம்பூரில் கடந்த 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திறக்கப்பட்ட பிருந்தா தியேட்டர் 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்த திரையரங்கம் தான் வடசென்னையின் முதல் ஏசி திரையரங்கம் ஆகும். இந்த தியேட்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திறந்து வைத்ததால் இதை ரஜினி திரையரங்கம் என்று ரசிகர்கள் அழைப்பார்கள். இந்த தியேட்டரில் மொத்தம் 1170 இருக்கைகள் உள்ளன
ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவரால் கட்டப்பட்ட இந்த தியேட்டரில் ரஜினி படங்களை தவறாமல் திரையிட்டு வந்தனர், அதன் காரணமாகவே இந்த தியேட்டரை ரஜினி தியேட்டர் என்று அழைத்தனர். ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் இங்கு 100 நாட்கள் கடந்து ஓடியிருக்கின்றன. குறிப்பாக 1989 ஆம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படம் 200 நாட்களை கடந்து ஓடியது. இதுமட்டுமில்லாமல் ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை போன்ற படங்கள் இங்கு அதிக நாட்கள் ஓடியுள்ளது.
காலம் மாற மாற மக்கள் தங்களை அப்டேட் செய்து வருகின்றனர், சாட்டிலைட் தொடங்கி ஓடிடி தளங்கள் வரை தற்போது காலம் மாறி வரும் நிலையில் திரையரங்களுக்கு செல்லும் மக்களின் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் மல்டிபிளக்ஸ் திரையிரங்குகள் நோக்கி செல்லும் மக்கள் போன்ற பல்வேறு காரணங்கள் சிங்கிஸ் ஸ்கீரின் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் குறைகிறது.
இதனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்து பிருந்தா திரையரங்கம் தற்போது மூடப்பட்டுள்ளது. செல்லுலாய்ட் காலத்தில் இருந்து திரைப்படங்களை திரையிட தொடங்கி தற்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை திரைப்படங்களை திரையிட்ட என்ற பெருமை இந்த தியேட்டருக்கு உண்டு. நடிகர் மோகன் நடிப்பில் வெளியான கீதம் புதிது என்ற படம் இங்கு திரைப்படமாகும், இந்த தியேட்டரின் கடைசி படமாக டிராகன் படம் திரையிடப்பட்டது.
என்னவாகும் இந்த இடம்?
தற்போது இந்த இடத்தை ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளது, அதனால் இங்கு அடுக்குமாடி குடியிருப்பு வரலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் சென்னையின் முகங்களாக இருந்த பல பிரபலமான தியேட்டர்கள் இடிக்கப்பட்டு தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது, என்னதான் ஓடிடி என பல மாற்றங்கள் வந்தாலும், தியேட்டருக்குன் சென்று விசிலடித்து திரைப்படங்களை கொண்டாவது போன்று உணர்வை இந்த ஓடிடி தளங்கள் தராது என்று சொன்னால் அது மிகையாது.